Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

கண் கருவளையம் ! முகப்பரு ! சரும பிச்சனை ! தோல்வெடிப்பு மற்றும் உதடு வெடிப்பை சரி செய்ய பாட்டி வைத்தியம் ! How to Get Rid of Acne ! Pimples ! Dark Circle ! முகத்தின் அழகு பிரகாசிக்க எளிய வீட்டு அழகு குறிப்புகள் !!

கண் கருவளையம் ! முகப்பரு நீங்க ! சரும பிச்சனை மற்றும் உதடு வெடிப்பை சரி செய்ய  பாட்டி வைத்தியம் ! How to Get Rid of Acne ! Pimples ! Dark Circle ! முகத்தின் அழகு பிரகாசிக்க எளிய வீட்டு அழகு குறிப்புகள் !! 


How to Get Rid of Acne  Pimples


எவ்வளவுதான் சுத்தமாக முகத்தினை பராமரித்தாலும், முகப்பருவும், கரும்புள்ளியும் தோன்றி முகத்தின் அழகை கெடுத்து விடுவதாக நினைக்கிறார்களா.? கவலைப்பட வேண்டாம். நட்சத்திரம் போல உங்கள்  முகம் பிரகாசமாக ஜொலிக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. 

தோல் வெடிப்பு மற்றும் சரும பிரச்சனையை போக்கும் தேங்காய் எண்ணெய்:-

கொளுத்தும் வெயில் காலத்தில் பலருக்கு முக சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, தோல் சுருங்கி விடுவதுடன், வெள்ளை நிறமாகவும் தோற்றம் அளிக்கும். சிலருக்கு உடல் முழுவதும் அரிப்பு உணர்வு ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்புகளை நிவர்த்தி செய்யக்கூடிய சுலபமான சருமப் பராமரிப்பு முறைகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி மேற்கொள்ளக் கூடிய சருமப் பராமரிப்பு வழி முறைகளை காணலாம்.

குளிப்பதற்கு முன்னர் தேங்காய் எண்ணெய்யை உடம்பில் நன்றாக தேய்த்துக் கொள்ள வேண்டும். சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக, பச்சைப் பயறு பொடி அல்லது கடலை மாவு ஆகியவற்றை பயன்படுத்தி குளிப்பது நல்லது. குளித்த பின்னர் உடம்பை நன்றாக துடைத்து விட்டு, மீண்டும் தேங்காய் எண்ணெய்யை பரவலாக உடம்பில் தேய்த்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு சரும பராமரிப்பை தொடர்ந்து செய்து வந்தால், சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். 

மேலும், தோலில் உருவாகும் வெடிப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் கிரீம் வகைகள் எதுவும் பயன்படுத்த வேண்டியதில்லை. தினமும் இந்த பராமரிப்பை மேற்கொள்ள இயலாவிட்டாலும், வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து சருமப் பராமரிப்புக்கு உதவும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி  வரலாம்.

வெயில் காலங்களில் கைகள், கால் முட்டிகள் ஆகிய இடங்கள் சொரசொரப்பாகவும், கருமை நிறத்திலும் காணப்படும். அப்பகுதிகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து தேய்த்த பின்னர், அரை மணி நேரம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், கைகள் மற்றும் கால் மூட்டு பகுதிகள் மிரு துவாகவும், கருமை நிறம் நீங்கி பளபளப்பாகவும் மாறி விடும்.

குளிர் மற்றும் வெயில் காலங்களில் பாதங்களில் ஏற்படும் வெடிப்புகள் இதர அளிக்கும் உள்ளதைவிட அதிகமாக இருக்கக்கூடும். அழகற்ற தோற்றம் வெடிப்புகள் மறைந்து, பாதங்கள் அதன் இயல்பான நிலைக்கு வருவதால் பலர் பாதங்களுக்கான தேய்ப்பான்கள் மற்றும் சொரசொரப்பான பொருட்களைக்கொண்டு தோல் விடுவது வழக்கம். அதற்கு மாறாக, இரவில் உறங்குவதற்கு முன்னர் கணுக்கால் முதல் பாதம் தேங்காய் எண்ணெய்யை, நன்றாக சூடு கிளம்பும் அளவிற்கு தேய்த்து விடலாம். இந்த முறையின் காரணமாக பித்த வெடிப்புகள் மறைவதுடன், உடல் வலி, அசதி ஆகியவையும் நீங்கும். 

கண் கருவளையம் (Dark Circles) போக :

Dark Circles Remedy at Home :-

செல்போனை ஒரு நாளில் அதிகப் படியான நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, கண்களுக்கு கீழ் கருவளையம் (Dark Circles) தோன்றி, முகத்தின் அழகு பாதித்து விடுகிறது.கண் கருவளையம் தோன்ற முக்கிய காரணம் உடலில் நீர் சத்து குறைபாடு இதன் காரணமாகி முகத்திற்கு ரத்த ஓட்டம் குறைந்து கண் பகுதியில் தோல் மிக மெல்லியதாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள செல்கள் போதிய நீர் கிடைக்காமல் வறண்டு செல்கள் இறந்து விடுகின்றன மேலும் சரியான தூக்கமில்லையால் உடல் சோர்வு பெற்று அது கண் கருவளையம் (Under Eye Dark Circles) தோன்ற காரணமாகிறது மேலும்பல்வேறு அழகு சாதன பொருட்களை மாற்றி மாற்றி உபயோகிப்பதில் கண் கருவளையம் (Dark Circles) தோன்றும்.
 
😎கண் கருவளையம் (Under Eye Dark Circles) போக செய்ய பேரிச்சம்பழத்துடன் (Dates) சிறிது வெண்ணெய் (Butter) மற்றும் கசகசா (Poppy Seeds) கலந்து, அரைத்து சில நாட்கள் கண்களின் கீழ் தடவி வர வேண்டும். அதன் மூலம் படிப்படியாக கருவளையம் மறையும். 

😎கறிவேப்பிலையை (Curry Leaves) நன்கு காயவைத்து, அதனுடன் கசகசா (Poppy Seeds) மற்றும் கஸ்தூரி மஞ்சள் (Turmeric) ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியை, தினமும் குளிப்பதற்கு முன்னதாக முகத்தில் தடவி, ஐந்து நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இந்த பொடியை குளியல் பவுடராகவும் உபயோகப்படுத்தலாம். தொடர்ச்சியாக இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள கரு வளையம் (How to Remove Dark Circles), கடினத்தன்மை ஆகியவை நீங்குவதுடன், முகம் பள பளப்பாகவும், பட்டுப்போல மிருதுவாகவும் இருக்கும். 

கருவளையத்தை போக்கும் உருளை கிழங்கு :-

Dark Circles Under Eyes Home Remedy :-

😎ஒரு உருளைக்கிழங்கை அரைத்து, கண்களைச்சுற்றி பூசி வந்தால், கருவளையம் மறையும் (Dark Circle Remedy). 

😎கண்களை குளிர்விக்கும் வகையில், கேரட் அல்லது வெள்ளரி பிஞ்சை மெல்லிதாய் நறுக்கி, வாரம் ஒன்றிரண்டு முறை கண்களின் மேல் வைத்தால் நல்ல பலனளிக்கும்.

😎தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறைக் கலந்து (Dark Circles Cream), கருவளையத்தின் மீது பூசி வர வேண்டும். பூசிய 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால், கருவளையம் நீங்கி அழகு பெறலாம்.

😎இரவில் கண்களைச் சுற்றி, பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவி வந்தால், கரு வளையத்திலிருந்து விடுதலை பெறலாம்.

😎நல்ல தூக்கமும், கண்களுக்கு தேவையான அளவு ஓய்யும் கொடுத்தால், கருவளையத்திற்கு சில சீக்கிரமே டாட்டா சொல்லி அனுப்பிவிடலாம் (How to Get Rid of Dark Circles).

முகச்சுருக்கம் மற்றும் முகப்பருவை போக்கும் கொய்யா இலை :-

Kerala Tips for Glowing Skin in Tamil :-

முகப்பரு   தோன்றுவதற்கு முக்கிய காரணம் முகத்தோலில் உள்ள துளைகளில் அழுக்குகள் அண்டுவதே ஆகும்,  மேலும் சிலருக்கு முகத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் முகப்பரு உண்டாகிறது. எனவே அடிக்கடி முகத்தினை கழுவி சுத்தமாக வைத்திருந்தால் முகப்பரு தோன்றாது.  


Face Beauty Tips Tamil :-

👍வாரத்திற்கு  இருமுறை முகத்தில் ஆவி பிடிப்பதால் ( Face Steaming )முகத்தில் உள்ள செல்களில் அண்டி உள்ள கிருமி மற்றும் அழுக்குகள் வெளியேற்ற பட்டு கிருமி தோற்று ஏற்படாமலும் , முகப்பரு தோன்றாமலும் பாதுகாக்க படுகிறது. முகத்தில் சுடுநீர் ஆவி பிடிக்கும் பொது முகத்தில் உள்ள செல் துளைகள் பெரியதாகி துளைகளுக்கு நடுவே சிக்கி உள்ள அழுக்குகள் சுலபமாக வெளியேற வழிவகுக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பதும் கட்டு படுத்த படுகிறது.

👍பளபள முகத்திற்கு கொய்யா இலைகளை காய வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனை நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால், முகச்சுருக்கங்கள் மறையும் மேலும்  இளமை ததும்பும்  (Face Whitening Home Remedy in Tamil).

👍கொய்யா இலையை, ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும், பின் 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், அழகு அள்ளும் ( White Skin Tips), கொய்யா இலையில் பாக்டிரியாக்களை கொல்லும் தன்மை உள்ளது. 

👍கொய்யா இலையை அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வந்தால், முகம் பளபளப்பாக இருக்கும்.

👍கற்றாழைச் சாறுடன், கொய்யா இலையை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால், முகம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும் (Skin Whitening Tips in Tamil).

👍கொய்யா இலை, பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்துப் பூசி வந்தால், முகத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி அழகு கூடும்  (Skin Whitening Facial at Home in Tamil ) .

👍முகப்பரு உள்ளவர்கள் மேலும் முகப்பொலிவு பெற விரும்புபவர்கள் சிறிதளவு ரோஸ் வாட்டர் ( Rose Water), 3 முதல் 5  ட்ராப் எலுமிச்சை சாறு ( Lemon Juice ) மற்றும் அதே அளவில் கிளிசரின் ( Glycerin ) சேர்த்து மிக்ஸ் செய்து அதனை தினமும் இரவு தூங்கும் கண்ணில் படாமல் முன் முகத்தில் தடவி காலையில் மிதமான சுடுநீரில் கழுவி வர அது முக தோலில் உள்ள அழுக்குகளை நீக்கி  கிருமி தோற்று ஏற்படாமலும் முகப்பரு உருவாவதை தடுப்பதோடு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குகிறது மேலும்  புது செல்கள் உருவாவதை ஊக்குவித்து முகம் அழகுடன் பொலிவு பெற உதவுகிறது. மேலும் முகத்தில் அதிக படியான எண்ணெய் சுரப்பதை கட்டு படுத்திக்கிறது ( Face Beauty Tips Tamil ). 

தலைமுடி உதிர்வை சரிசெய்ய : 

கோடை காலத்தில், தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு உதிர்வதும், உடைவதும், நுனி பிளவுபடுவதும் மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும். இந்த சிக்கலுக்கு முட்டையின் வெள்ளைக்கரு, ஆலிவ் எண்ணெய் ( Oliv Oil )  மற்றும் சோற்று கற்றாழை ஜெல்  ( Aloe Vera Gel ) ஆகியவற்றை பசைபோல கலந்து, தலையில் தடலி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிகைக்காய் அல்லது வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு ஆகியவற்றை உபயோகித்து நன்றாக அலச வேண்டும். அதன் மூலமாக, முடி உதிர்வது, வறண்டு போவது ஆகிய வற்றை தவிர்க்க முடியும். இயற்கையான இந்த முறைகளால் தலைமுடி மிருதுவாக மாறும். 

வாய் துர்நாற்றம் போக :

ஒரு சிலருக்கு வாயிலிருந்து துர் நாற்றம் வருவதுண்டு இதற்கு முக்கிய காரணம் வயிற்று பகுதியில் ஏதானும் கோளாறு இருப்பதே ஆகும், வாய் துர்நாற்றம்  பொதுவாக வயிறு அல்லது குடல் பகுதியில் ஏதேனும் பதிப்பி இருத்தல் அதனை உணர்த்தும் ஒரு அறிகுறியாகும் மேலும் சரியாக பல் துலக்க விட்டாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்த பிரச்சனையை அகற்ற சுலபமான வழி உள்ளது. பன்னீர் ரோஜா இதழ்களை நன்றாக கழுவி, வெற்றிலையுடன் ( Betel Leaf ) சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்வதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கும். 

ஏலக்காய் வாயில் போட்டு மெல்லுவதன் மூலம் வாய் துர்  நாற்றத்தை குறைக்கலாம் மேலும் அதிக படியான தண்ணீர் குடிப்பதாலும் வாய் துர் நாற்றத்தை அளவை கட்டு படுத்தலாம்.    

உடலின் அனைத்து பிணிகளையும் போக்கும் மண் குளியல் சிகிச்சை தெரபி இயற்கை மருத்துவ முறை  :-  👈 கிளிக் செய்யவும்

உதடு வெடிப்பை சரிசெய்ய :

சிலருக்கு உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு, கருமை நிறத்தில் இருப்பதுடன், தோல் உரிந்து ரத்தமும் வரும். இந்த பிரச்சினையை சரிசெய்ய, அடிக்கடி பாலாடை அல்லது வெண்ணெய் ( Butter ) ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை உதட்டின் மீது தடவி வரலாம். அதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகி விடும்.

Actress Sakshi Agarwal Hot Photos ஏம்மா காட்டணும்னு முடிவுபண்ணிட அதுக்குன்னு இப்படியா !!! தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்த சாக்க்ஷி அகர்வால் !!!  Sakshi Agarwal :- 👈 கிளிக் செய்யவும்




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies