Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

முக்கனி என்றால் என்ன !! முக்கனிகளின் வரலாறு !! முக்கனிகளின் சிறப்பு !! முக்கனிகளின் மருத்துவ பயன்கள் !! History Of Mukkani in Tamil!!

முக்கனிகள் என எவ்வாறு தோன்றியது !! The Holy Trio of Jackfruit, Mango Banana !! Mukkani fruits images !! What is so special about Mukkani !! History Of Mukkani !! Mukkani in English !! Health Benefits of Mukkanigal


முக்கனி பெயர் காரணம் :

ஒற்றுமையால் நன்மை உண்டு என்பதை விளக்குபவை முக்கனிகள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலகட்டத்தில், பாண்டிய நாட்டில் மாம்பழமும், சோழ நாட்டில் வாழையும், சேர நாட்டில் பலாப்பழமும், அந்தப் பகுதிகளின் மண் வளத்திற்கேற்ப அதிகமாக விளைந்தன. வெவ்வேறு சுவை கொண்ட முக்கனிகளை (Mukkani) கூட்டாகவும், தனித்தனியாகவும் உண்பது உடல் நலத்துக்கு நன்மை அளிக்கும் என்ற கருத்து பழைய பாடல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 


History Of Mukkani

மாம்பழம் (Mango):


mukkani-mango

🍋மாம்பழம் முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். உடலுக்கு உஷ்ணம் ஏற்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதன் தோலில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோய், கொலஸ்டிரால் போன்றவற்றை கட்டுப்படுத்துவதுடன், சிலவகை பழங்கள் புற்று நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

🍋மாம்பழ தோலில் அடங்கியுள்ள இரும்புச் சத்து, ரத்த சோகைக்கு மருந்தாக பயன்படும். இதில், 'ரெஸ் வெராட்ரால்' என்னும் ரசாயனம் உள்ளதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைத்து, 'கொலஸ்டிரால்' பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

🍋தீக்காயம் ஏற்பட்டவர்கள், மா இலையை தியில் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெய்யில் குழைத்து தடவி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும். மாங்கொட்டையில் உள்ள பருப்பில் கசாயம் காய்ச்சி, பருகினால் வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் கிருமிகளின் தொல்லை நீங்கும். 

பலாப்பழம் (Jack Fruit) :

mukkani-jack-fruit

🍐முக்கனியில் இரண்டாவது கனியான பலா, அனைவருக்கும் பிடித்தமானது. உடல் உஷ்ணத்தை குறைத்து, பித்த மயக்கம், தலை சுற்றல் ஆகியவற்றை குணமாக்கும். இதை, தேனில் ஊறவைத்து, உட்கொண்டால், மூளை நரம்புகள் வலுப்பெற்று, வாத நோய், சிந்தனை சிதறல் போன்ற பாதிப்புகள் குணமாகும். 

🍐பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூசினால் குணமாகும். இலையை சிறிதாக நறுக்கி, நீரில் இட்டு, கொதிக்க வைத்து வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண், பல்வலி ஆகியவை நீங்கும். 

🍐பலா பிஞ்சு, வெள்ளைப் பூண்டு, மிளகு, லவங்கப் பட்டை, தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்கா யம் ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டால், அதீத தாகம் தணியும், நீர்ச்சுருக்கு, நெஞ்செரிச்சல் ஆகியவற்றை குணமாக்கி, உடலுக்கு வலிமையையும் அளிக்கும். 

வாழைப்பழம் (Banana):

mukkani-bananaa

🍌வாழைப்பழம் இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை. தினமும் வாழை இலையில் உணவு உட்கொண்டால், மேனி பளபளப்பாகும். மந்தம், உடலில் பலம் குறைவு, இளைப்பு போன்றவற்றை அகற்றி, பித்தத்தையும் தணிக்கும். 

🍌வாழைப் பூலை, அடிக்கடி சமைத்து உண்டால் அதில் உள்ள வைட்டமின் பி காரணமாக, பெண் களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, குடல் புண், ரத்தபேதி மற்றும் மூல நோய் ஆகியவை குணமாகும். தினமும் ஒரு கிளாஸ் வாழைத் தண்டு சாறு குடித்து வர, சிறுநீர் நன்கு பெருகும். 

🍌நீர்ச் சுருக்கு, எரிச்சல் ஆகிய பாதிப்புகளும் குணமாகும். தொடர்ந்து வாழைத் தண்டு சாறை குடித்து வருபவர்களின் உடல் பருமன் குறையும், வாழைத் தண்டை உலர்த்தி, பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட, கல்லீரல் வலுவடைந்து, காமாலை நோய் குணமாகும்.

🍌வாழை பிஞ்சு மற்றும் வாழைக்காயை வதக்கி சாப்பிட, உமிழ்நீர் நன்றாக சுரப்பதுடன், ரத்த மூலம், ரத்தக் கடுப்பு, வயிற்றுப்புண், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம், இருமல் ஆகியவை அகலும்,

🍌தினமும் ஒரு வாழைப் பழத்தை ஏலக்காய் பொடியுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட, மூளையின் செயல் திறன் மேம்படும். பெண்களுக்கு மாதவிலக்கு சிக்கல்கள் சீராகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies