Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

அடேங்கப்பா புங்க மரத்தில் இவளோ மருத்துவ குணங்களா !! புங்க மரம் மருத்துவ பயன்கள் !! Pongamia Pinnata Medicinal Uses

புங்க மரம்  மருத்துவ பயன்கள் !! Pongamia Pinnata Medicinal Uses !! Pongame Oiltree !! Millettia Pinnata !! Pungam Tree !! Pungai Tree !! Kanuga Chettu !! Kanuga Tree !! Karanji Tree !! Sukh Chain Tree !! Pongamia Pinnata Uses




Pungam Tree / Pungai Tree / Pongamia Pinnata  என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் புங்க மரம் குறைவான பராமரிப்பில் தாமாகவே வளர்ந்து பல்வேறு நன்மைகளை அளிக்கும் மர வகைகளில் புங்க மரமும் ஒன்று, வீட்டுக்கு வெளியே காம்பவுண்டு சுவர் ஓரமாக ஒரு புங்க மரக்கன்றை நட்டு வைத்து, ஆரம்ப காலங்களில் மட்டும் பாதுகாத்து வந்தால் போதும். தாமாகவே வளர்ந்து, குளிர்ச்சியான நிழலைத் தருவதுடன், பலவிதமான நோய்களை விரட்டும் மருந்தாகவும் பயன்படும். புங்க மரத்தின் இலைகள், மலர்கள், விதை, பட்டை, வேர் ஆகியவை பல்வேறு மருத்துவ குணம் கொண்டவை. ( Pungai Tree )அவற்றைப் பற்றி இங்கே காண்போம். 


Benefits of the Tree Pongamia Pinnata


Benefits of the Tree Pongamia Pinnata :

கெட்ட கொழுப்பை கரைக்க: 

கொழுப்பை குறைக்கும் புங்க விதை புங்க மரத்தின் முதிர்ச்சியான காய்களை பறித்து, அவற்றை வெயிலில் உலர்த்தி, உள்ளே இருக்கும் பருப்பை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும், காலையில் ஒரு புங்கம் பருப்பை பொடியாக்கி இரண்டு டம்ளர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க விட்டு, அரை டம்ளர் அளவுக்கு சுண்டியதும் வடிகட்டி ஆற வைத்து அருந்த வேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் ரத்தத்தில் கலந்திருக்கும் நசசுத்தன்மை அகலும். 

சர்க்கரை நோய்க்கான (நீரிழிவு) சிறந்த மருந்து :

சிறுநீர் குறைவாக வெளியேறும் பிரச்சினை இருந்தால், இந்த பொடியை சுடுநீரில் கலந்து அருந்தலாம். அதனால், சிறுநீர் உற்பத்தி பெருகி, ஆரோக்கியம் மேம்படும்.

நீரிழிவை கட்டுப்படுத்தும் புங்க மலர் நீண்ட காலமாகவே சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்த புங்கம் பூவை முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளர். நவீன மருந்துகளின் வருகையால், தற்போது புங்கம் பூவின் (Pungai Tree Flower) மருத்துவ பயன்கள் பலருக்கும் போய் விட்டது. 

Benefits of the Tree Pongamia Pinnata

புங்க மரம் (Pungai Tree) பூக்கும் காலங்களில் பூக்களை சேகரித்து, வெயிலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு டீஸ்பூன் அளவு, ஒரு டம்ளர் நீருடன் கலந்து கொதிக்க வைத்து, கால் டம்ளராக சுண்டியதும், வடிகட்டி பருகலாம். 

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் இதனை இரண்டு அல்லது மூன்று தடவை பருகி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். மேலும், ரத்தத்தில் உள்ள தேவையற்ற மாசுக்கள் வெளியேறவும் இது உதவுகிறது. இதனை உபயோகிப் பதற்கு முன்பு மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது. 

மூட்டு வலியை குணப்படுத்த :

மூட்டுவலியை அகற்றும் புங்க எண்ணெய் புங்க விதை (Pongamia Pinnata) எண்ணெய் மூட்டு வலி அகல உதவுகிறது. பாதிக்கப்பட்ட மூட்டுகளின் மீது தடவி, லேசாக மசாஜ் செய்து, சிறிது தூரம் மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொண்டால் மூட்டு வலி அகலும். தொடர்ந்து சில நாட்களுக்கு இந்த முறையை பின்பற்றி வந்தால், மூட்டுவலி தொந்தரவில் இருந்து விடு படலாம்.


Benefits of the Tree Pongamia Pinnata


தொடர் இருமலை சரிசெய்ய :

தொடர் இருமல் கட்டுப்பட, பருவ நிலை மாற்றம் காரணமாக சிலருக்கு ஏற்படும் இருமல் எளிதாக குணமாவதில்லை . குழந்தைகளும் இருமல் காரணமாக கடுமையாக பாதிக்கப் படுவதுண்டு, இந்த சிக்கலை கட்டுப்படுத்த புங்க விதை பருப்பை பொடி செய்து, சிறிதளவு தேன் கலந்து குழைத்து, சுவைத்து சாப்பிட்டால், தொடர்ச்சியான இருமல் உடனடியாக கட்டுப்படும்.

புங்க மரத்தின் இதர மருத்துவ பயன்கள் : 

புங்க இலை (Pongamia Pinnata) சாறு, அஜீரண கோளாறு, பேதி ஆகிய தொந்தரவுகளை குணப்படுத்துகிறது. தோலில் அரிப்பு நீங்க புங்க இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து கழுவ அரிப்பு நீங் கும். மருத்துவ குணம் கொண்ட புங்கையை உப யோகிப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies