Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

மண் குளியல் சிகிச்சை ! Health Benefits of Mud Therapy in Tamil !மண் சிகிச்சை! Sand Bath Therapy ! உடலின் அனைத்து பிணிகளையும் போக்கும் மண் குளியல் சிகிச்சை தெரபி இயற்கை மருத்துவ முறை

மண் குளியல் சிகிச்சை ! Health Benefits of Mud Therapy in Tamil !மண் சிகிச்சை! Sand Bath Therapy ! உடலின் அனைத்து பிணிகளையும் போக்கும் மண் குளியல் சிகிச்சை தெரபி இயற்கை மருத்துவ முறை 



Health Benefits of Mud Therapy in Tamil



பஞ்ச பூதங்களாக கருதப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றால் மனித உடல் இயங்குகிறது. அவற்றைக்கொண்டே மனிதனுக்கு வரும் நோய்களைத் தீர்க்க முடியும் என்று இந்திய யோகா நெறிகளும், இயற்கை சிகிச்சை முறைகளும் தெரிவிக்கின்றன. 


பஞ்ச பூதங்களாக கருதப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றால் மனித உடல் இயங்குகிறது. அவற்றைக்கொண்டே மனிதனுக்கு வரும் நோய்களைத் தீர்க்க முடியும் என்று இந்திய யோகா நெறிகளும், இயற்கை சிகிச்சை முறைகளும் தெரிவிக்கின்றன. 


எடுத்துக்காட்டாக, பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலம் மூலம் மண் சிகிச்சை தரப்படுகிறது அதன் மூலம் தீராத உடல் பிணிகள் விரட்டி அடிக்கப்படுகிறது. பஞ்ச பூதங்களில் முதலிடம் வகிப்பது நிலம், மண்ணுக்கு உயிர் இருப்பதால், தீராத நோய்களுக்கு அதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். 


Health Benefits of Mud Therapy in Tamil


மண் சிகிச்சை (Mud Therapy) என்றால் என்ன ?

மண் குளியல் சிகிச்சை முறை நம் முன்னோர்கள் காலத்தில் மிகவும் பரவலாக காணப்பட்டது அனால் கால போக்கில் பல்வேறு வேதி பொருட்கள் கலந்த அழகாக்கு சாதன பொருட்கள் வர வர அதன் தாக்கம் சமூகத்தில் அதிகரித்து பண்டைய கால இயற்கை மருத்துவங்கள் படிப்படியாக  அழிந்து  வருகின்றன.

மண் குளியல் சிகிச்சைக்கு எல்லாவித மண்களும் பொருந்தாது, ஆகவே இந்த மண் சிகிச்சையை மேற்கொள்ள சிறந்த மண்ணை நம் தேர்வு செய்ய வேண்டும் இல்லையெனில் மண்ணில் உள்ள வேதி பொருட்கள் நமது தோலிற்கு அலர்ஜி போன்ற உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

ஆக இம்முறையான பாரம்பரிய இயற்கை மருத்துவ மண் குளியல்  சிகிச்சைக்கு  புற்று மண்களே சிறந்தது, புற்று மண்ணில் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் சக்தி உள்ளது மேலும் இது தோற்று கிருமி மற்றும் அழுக்கி நீக்கியாக பயன்படுகிறது. 

மேலும் நேரடியாக நாம் மண்ணை எடுத்து நீரில் குழைத்து சிகிச்சை மேற்கொள்ள கூடாது அதர்கேன் சில வழிமுறைகள் உள்ளன. முதலில் மண்ணை எடுத்து கற்களை நீக்க சலித்து பிரித்தெடுக்க வேண்டும் பின்னர்  அதனை சூரிய ஒளியில் காயவைத்து எடுக்க வேண்டும் பின்னர் அதனை நீரில் குழப்பி குறைந்தது 5  மணிநேரமாவது பத படுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு பத படுத்திய பின்னரே அதனை நாம் உபயோகிக்க வேண்டும்.


இம்முறை வைத்தியத்திற்கு மண் சிகிச்சை (Mud Therapy), மண் குளியல், மண் குளியல் சிகிச்சை (Sand Bath Therapy), மண் ஒத்தடம் என பல பெயர்கள் உள்ளன. மண் சிகிச்சை என்பது நேரடி சிகிச்சை, மறைமுக சிகிச்சை என இரண்டு வழிகளில் அளிக்கப்படுகிறது. உடல் முழுவதும் மண் பூசுவது நேரடி சிகிச்சையாகும். துணியில் மண்ணை வைத்து பேக் செய்து வயிறு, கண் போன்ற இடங்களில் வைப்பது மறைமுகச் சிகிச்சை ஆகும். மண் உடலில் பூசப் படும்போது அதில் உள்ள தாதுக்கள் பல்வேறு மருத்துவப் பலன்களை தருகிறது என்ற அடிப்படையில் "மண் குளியல் சிகிச்சை"மேற்கொள்ளப் படுகிறது. 


இந்த முறையில் தேவையான அளவு மட்டுமே ஆடைகளை அணிந்து, உடலில் சூரிய ஒளி படுமாறு இருக்கையில் அமர்ந்து தலைமுடி தவிர உடல் முழுவதும் மண் பூசப்படுகிறது. நோய் பாதிப்புகளைப் பொறுத்து சில மூலிகைகள் சேர்க்கப்பட்டு மண் குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 


கண் கருவளையம் !!! முகப்பரு நீங்க ! உதடு வெடிப்பை சரி செய்ய !!! முகத்தின் அழகு பிரகாசிக்க எளிய வீட்டு அழகு குறிப்புகள் :-  👈 கிளிக் செய்யவும்



மண் குளியல் சிகிச்சையின் பயன்கள் (Health Benefits of Mud Therapy) :-


Health Benefits of Mud Therapy in Tamil


  • இன்றைய நாட்களிலும்  வயல் வெளியில் விவசாயிகள் வெறும் காலுடன் நடப்பதால் தான், பெரிதாக நோய் பாதிப்புக்கு உள்ளாவதில்லை என்கின்றன ஆராய்ச்சி வல்லுநர்கள், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற வாயுக்கள் நிறைந்த மண் ரத்தத்தை சுத்திகரித்து, மேலும் உடல் உபாதைகளை சீர் செய்து, உயிர் சக்தியை அதிகரிக்கிறது. மண்ணுக்கு உயிர்ச்சக்தி அளிக்கும் தன்மை இருப்பதால் மனிதனின் மலட்டுத்தன்மையை அகற்றுவதாகவும் நம்பிக்கை உண்டு.

  • முகப்பரு, முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்னை உள்ளவர்கள் முகத்தில் பதப்படுத்திய புற்று மண்ணை பூசி வந்தால் முகத்திற்கு ஈரப்பதத்தை அதிகரித்து, முகத்திலுள்ள அழுக்குகளை நீக்கி முகத்தில் எண்ணெய் சுரப்பை கட்டு படுத்தி முக பொலிவு பெற உதவுகிறது.    

  • உடல் உஷ்ணம் உள்ளவர்கள் உடல்  முழுவதும் மண் பூசி அடிக்கடி மண் குளியல் செய்வதன் மூலம் உடல் சூடு தணிக்கப்பட்டு உடல் புத்துணர்ச்சி பெறுகிறது மேலும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

  • மூட்டு வலி உள்ளவர்கள் மேற்கண்ட முறையில் மண்ணை பதப்படுத்த பட்டு மூட்டு வழியை குணப்படுத்தும் திறன் கொண்ட முடக்கத்தான் இலை சாறு கலந்து பற்று போல செய்து கட்டி வந்தால் மூட்டு வலி குணமாகும்.மேலும் மூட்டுகளுக்கு நடுவே ரத்த ஓட்டம் அதிகரித்து மூட்டு நரம்புகள் வலுப்பெறும்.

  • உடலிலுள்ள நச்சுகளை தோலின் துளைகளின் மூலம் மண் உறிஞ்சிக்கொள்வதால், உடலுறுப்புகள் பலம் பெறுகின்றன என்ற அடிப்படையில், மண்ணை கை கால், முகம், கழுத்து, வயிறு என நோய்க்குத் தகுந்தவாறு பூசி சிகிச்சை தரப்படுகிறது.

  • அக்கி பாதிப்புகளுக்குக் குப்பைமேனி இலைகளைச் சேர்த்தும், சின்னம்மை பாதிப்புக்கு மண்ணுடன் மஞ்சள், வேப்பிலை சேர்த்தும் கை, கால், முகம், கழுத்து வயிறு என நோய்க்குத் தகுந்தவாறு பூசப்படு கிறது. 

  • மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, உடலைப் பக்குவப்படுத்துவதுடன், ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் ஒழுங்காகச் சுரக்க உதவுவதால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் நீங்குவ தாகவும் இயற்கை மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

  • எக்ஸிமோ, சொரியாசிஸ், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, இடுப்புவலி, கழுத்து வலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இம்முறை சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும் இது போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த இயற்கை மருத்துவ  முறை பயன்பாட்டில் உள்ளது . 


1 ரூபாய் செலவு மட்டுமே ,மூக்கடைப்பு போயே போச்சு !!! சளி மூக்கடைப்பு இயற்கை மருந்து !!! Mookadaipu Marunthu !!! Nasal Congestion Home Remedies :- 👈 கிளிக் செய்யவும்



  • இயற்கை மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைப்படி மண் சிகிச்சையை மேற்கொள்வதே சிறந்த அணுகுமுறையாகும் ஏனென்றால் நோய் பாதிப்பிற்கு ஏற்ப வெறும் மண்ணிலோ அல்லது சில பல மூலிகைகள் மண்ணுடன் கலந்தோ மண் சிகிச்சை அளிக்க படுகிறது. சென்னை மண்டலத்தில் உள்ள அருகம்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண் சிகிச்சை இலவசமாக இலவசமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies