Pimples on Face Removal Tips !!! Pimples Removal in Tami L!!!pimples Home Remedies !!! Pimple Cream!!! Pimple Patch !!! Pimple Cream Homemade!!! Pimple Clear Soap !!! Pimple Cream for Dry Skin !!! Pimple Cream for Oily Skin
அழகாக மேக்கப் செய்திருந்தாலும், முகப்பருக்கள் காரணமாக இமேஜ், டேமேஜ் ஆகும் சங்கடம் பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது. வயது வரம்பின்றி தோன்றும் முகப்பருக்களை அகற்ற, தரமான கிரீம் வகைகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினாலும், பலன்கள் ஏதும் சரியாக கிடைப்பதில்லையா? இதோ, இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி, பருக்களை அகற்ற உதவும் சில தீர்வுகளை பார்ப்போம்.
முகப்பரு (Pimples) உருவாக காரணங்கள்:
தோலுக்கு அடியில் அமைந்துள்ள 'செபேஷியஸ்' சுரப்பிகளில் இருந்து, 'சீபம்' என்னும் எண்ணெய் பொருள் சுரக்கிறது. இது சருமத்தை மினுமினுப்பாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. மாசு மற்றும் தூசு இந்த எண்ணெய் பொருளில் படிந்து சருமத்தில் உள்ள துளைகளை அடைத்துக்கொள்கிறது. இதனால் தோலுக்கடியில் சுரக்கும் சீபம் வெளிவர முடியாமல் தேங்கி நிற்கும். இதில் பாக்டிரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு, சருமத்தில் பருக்கள் தோன்றுகின்றன.
உடனடியாக அவற்றை கிள்ளி எறிய பலருடைய கைகள் துடிக்கும். ஆனால், அவ்வாறு செய்யக்கூடாது. அவற்றை கிள்ளிவிட்டால் புண்ணாகி விடும். அவற்றின் மேல், புதினா இலைகளை அரைத்து தடவலாம்.
முகத்தில் தோன்றும் கட்டிகளின் மீது புற்று மண்ணை தடவும் பழக்கம் பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளது. தற்போது அதற்காக தரமான களிம்புகள் கிடைக்கின்றன.
கட்டிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணம், கிரீம் வகைகள் மற்றும் பவுடர் ஆகியவற்றை அடிக்கடி தடவுவதாகும். அவை, சருமத்தில் வியர்வையுடன் தங்கி, அழுக்காக மாறி தோலில் கட்டியை ஏற்படுத்துகின்றன. இந்த சிக்கலுக்கு எளிதான தீர்வு, குளிர்ந்த நீரால் அடிக்கடி முகத்தை கழுவுவதாகும். மேலும் வேப்பிலை பொடியுடன், மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வரலாம்.
முகப்பருவை நீக்க உதவும் இயற்கை முறை பாட்டி வைத்தியம் :
Pimples Treatment at Home:
👌அருகம்புல் சாறு, பன்னீர், பப்பாளி ஆகியவற்றை சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவலாம். இது, சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட கருமையை அகற்றுவதுடன், முகப்பருக்களையும் (Pimples) மறையச் செய்யும்.
👌வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப் பொடி ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து, மிதமான நீரில் குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் பருக்கள் மறையும். இந்த கலவையை கண்களுக்கு கீழ்ப் புறம் தடவக் கூடாது.
👌தேன் மெழுகையும், சர்க்கரையையும் சேர்த்து குழைத்து முகப்பருக்களின் மீது தடவி வர, பருக்கள் (Pimples) விரைவில் மறைந்து முகம் பளபளக்கும்.
👌நான்கு துளசி இலை, சிறிதளவு வேப்பந்தளிர், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, அரை மஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, பருக்களின் மீது தடவி, 5 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் முகத்தைக் கழுவினால், சருமம் மிருதுவாகி பருக்களும் (Pimples) மறையும்.
👌அருகம்புல் பொடி, குப்பை மேனி இலைப்பொடி இரண்டையும் சம அளவு எடுத்து கலக்கி, இரவில் பருக்களின் மீது தடவி, காலையில் முகத்தை கழுவவும். ஒரு வாரம் தொடர்ச்சியாக இம்முறையை கடைப்பிடித்தால் பருக்கள் (Pimples) அகன்று முகம் மிளிரும்.
👌ஊமத்தம் பூக்களை நசுக்கி, பருக்களின் மீது பற்று போடுவ தாலும், எலுமிச்சை இலைகளை அரைத்து பருக்களின் மீது தடவுவதாலும் முகம் பளபளப்பாகும்.