Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

வறண்ட கூந்தல் பிரச்னையா ? வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க மற்றும் இளநரை நீங்க எளிய இயற்கை முறை பாட்டி வைத்தியம் !!! How To Get Shine Hair in Tamil !!! White Hair Causes and Hair Treatment

வறண்ட கூந்தலை மிருதுவாக்க மற்றும் இளநரையை சரி செய்ய எளிய இயற்கை முறை பாட்டி வைத்தியம் !!! How To Get Shine Hair in Tamil !!! Home Remedies for Shiny and Smooth Hair !!!   How to Get Shiny Hair Naturally !!!   How to Get Soft Hair Naturally at Home !!! Tips for Preventing white Hair in Tamil !!! Premature White Hair


Premature White Hair


சிலருக்கு, அடிக்கடி தலைக்கு குளிப்பதாலும், வெளிப்புறத்தில் உள்ள மாசுக்களின் பாதிப்பாலும், கூந்தல் வறண்டு காணப்படும். மேலும், கூந்தலுக்கு வண்ணம் பூசுதல், ரசாயன சிகிச்சை போன்றவையும் கூந்தலை வறண்டு போகச் செய்வதுடன், பலவினமாகவும் ஆக்குகின்றன. 


How to Get Shiny Hair


How to Get Shiny Hair :-

வாரம் ஒரு முறை, கூந்தலில் ஆலிவ் எண்ணெய் தடவி, நன்றாக ஊறவைத்து, தலைக்கு குளிக்கலாம். இது கூந்தலை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். தலைமுடி உலர்ந்த பின், 1 சொட்டுகள் ஆலிவ் எண்ணெய் பூசினால் கூந்தல் பட்டுப் போல் மென்மையாகும் (Home Remedied for Dry Hair).

2 தேக்கரண்டி காற்றாழை ஜெல், 3 சொட்டு தேங்காய் எண்ணெய், 1 கப் ரோஸ் வாட்டர் ஆகிய வற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை 'ஸ்பிரே' போன்று பயன்படுத்தலாம். கற்றாழையில் உள்ள வைட்டமின் சி, அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை வறண்ட கூந்தலை மென்மையாக்கும். 


How to Get Shiny Hair


How to Get Shiny Hair Naturally :-

👉தேங்காய் எண்ணெய் வறண்ட மற்றும் சேதமடைந்த முடியை சரி செய்து, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

👉இரவில் ஊற வைத்த ஒரு கப் வெந்தயத்தை, மைபோல அரைத்து, 2 தேக்க ரண்டி கடுகு எண்ணெய் மற்றும் ஒரு கப் தயிருடன் சேர்த்துக் கலக்க வேண்டும். இந்த கலவையை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, தலைக்குக் குளிக்கவும். கடுகு எண்ணெய் கூந்தலை மிருதுவாகவும், பொலிவானதாகவும் மாற்றும். தயிர் கூந்தலுக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும். வெந்தயம் கூந்தலுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.


How to Get Shiny Hair


How to Get Shiny Hair at Home :-

👉ஒரு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அத்துடன், கால் கப் கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் மற்றும் 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தலைமுடியின் வேர்ப்பகுதியில் படும்படி அக்கலவையைத் தடவி, 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசவும். வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம், கார் போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் கள் கூந்தலில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக்கொள்ள உதவுகின்றன. 

👉எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, அரை லிட்டர் பால் ஆகியவற்றை, ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெய்யில் சேர்த்து கலக்க வேண்டும். அந்த கலவையைக் காய்ச்சி, வடிகட்டி தலை முடியில் தடவினால், வறண்ட முடி மென்மையாகும். இளநரை வராது. முடி நீண்டு, அடர்த்தியாக வளரும்.

அடேங்கப்பா பெண்கள் உடலில் இவ்வளவு அதிசயங்களா 😱😱😱 :- 👈 கிளிக் செய்யவும்

How to Make Hair Silky :- 

👉முட்டையின் வெள்ளைக் கருவை சிறிதளவு, ஆலிவ் எண்ணெய்யில் கலந்து, கூந்தலின் வேர்ப் பகுதி முதல் நுனி வரை தடவவும். பிறகு குளிர்ந்த தண்ணீரில் தலைக்கு குளிக்கவும். இதனால் கூந்தல் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும் ( How to Make Silky Hair ).


How to Get Shiny Hair


இளநரை (Premature White Hair) நீங்க பாட்டி வைத்தியம் :-


Premature White Hair Treatment :-

👍கருகருவென நீண்டு வளர்ந்த கூந்தலுக்காக பெண்கள் ஏங்குவதுண்டு, ஆண்களும்கூட வயதான காலத்திலும் தலைமுடியை கருமையாக்க மெனக்கெடுவார்கள். பொதுவாக முகத்துக்கு அழகு தருவதில் தலைமுடியின் பங்கு மிக முக்கியமானது. 

👍இளம் வயதிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கி விட்டால் அது, மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, முடியை கருப்பாக்குவதற்காக என்னென்ன மருத்துவம் இருக்கிறதோ அத்தனையையும் தேட ஆரம்பித்து விடுகிறோம். உண்மையில் ஆசிய மக்களுக்கு, 25 வயதிலிருந்து முடி நரைக்கத் தொடங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இளநரை (Premature White Hair) எதனால் ஏற்படுகிறது? :-

Premature White Hair Causes :-

👍'மெலனோசைட்ஸ்' என்னும் நிறமியே, தலை முடி மற்றும் தோலுக்கு நிறத்தைக் கொடுக் கிறது. தோலில் உள்ள 'மெலனோசைட்ஸ்' குறையத் தொடங்கினால், தலைமுடி நரைக்கத் தொடங்கும். பரம்பரை இளநரை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் தைராய்டு ஹார்மோன் பிரச்சினை போன்றவற்றுக்காக நீண்டகாலம் மருந்துகள் சாப்பிடுவது, மன அழுத்தம், புற ஊதாக் கதிர் களின் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசு போன்ற பல்வேறு காரணங்களால் இளநரை ஏற்படலாம்.

👍உண்மையில் இளநரை வந்துவிட்டால், அதை மாற்ற முடியாது என்பதே உண்மை , நோய் பாதிப்பின் காரணமாகவோ அல்லது சத்துக்குறைபாடு களாலோ இளநரை ஏற்பட்டால், அதை சரிசெய்ய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இளநரை வந்தால் மீண்டும் அவர்களது தலைமுடியை கருப்பு நிறமாக மாற்ற வாய்ப்பு இல்லை.

இளநரை வராமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் :-

Premature White Hair Solution :-

👍வைட்டமின் பி12 சத்துக் குறைபாடு, இரதரை ஏற்பட மிக முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. வைட்டமின் பி12, பி6 புரதம், இரும்பு, தாமிரம் போன்ற சத்துக்கள் இளநரை வராமல் தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஆகையால், உணவில் இந்த சத்துகள் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

👍தைராய்டு ஹார்மோன்களில் பிரச்சினை ஏற்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைக்க ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்குத்தான் தைராய்டு ஹார்மோன் பிரச்சினை அதிகம் ஏற்படும். எனவே அறிகுறிகளைக் கவனமாக கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான மருத்துவம் மேற்கொண்டால் இளநரை (Premature White Hair) ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

Premature White Hair Remedy :-

👍முடி பராமரிப்புப் பொருள்களான லோஷன், கண்டிஷனர் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன் படுத்துவதாலும் இளநரை ஏற்படலாம். கலரிங், பிளீச் சிங் மற்றும் ரசாயனப் பொருள்கள் நிறைந்த ஷாம்புக்களை, அடிக்கடி தலையில் தேய்த்துக் குளிப்பதாலும் இளநரை உண்டாகலாம். எனவே, முடிந்த வரை தலைமுடியில் பாதிப்பு ஏற்படாதவாறு இயற்கை முறையில் பராமரித்து வர வேண்டும் (Premature White Hair Treatment ).

👍மன அழுத்தத்துக்கு நோ' சொல்லுங்கள். மன அழுத்தத்துக்கும் இளநரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். 

மேலும் படிக்க :- உடலை ஸ்லிம்மாக சிக்குன்னு வைத்துக்கொள்ள இயற்கை மருத்துவ குறிப்புக்கள் 

கூந்தலை கருமையாக்கும் வழிகள் :-

Premature White Hair Treatment in Ayurveda :-

👍இயற்கை முறையில் விளைந்த மருதாணி, அவரி இலையை காயவைத்துப் பொடியாக்கி, கலரிங் செய்ய பயன்படுத்தலாம்.

👍கறிவேப்பிலை, மருதாணி, அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி போன்றவற்றை அரைத்து, தலை மல் தேய்த்து வரவைத்துக் குளிக்கலாம். இவை அனைத்தையும் சேர்த்து எண்ணெய்யில் காய்ச்சி ஆறவைத்தும் தலையில் தேய்த்து வரலாம்.

👍கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடுவது. கறிவேப்பிலையில் டீ தயார்செய்து குடிப்பது போன்றவையும் இளநரை குறைபாட்டை சரிசெய்ய உதவும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற இவற்றை செய்வது நல்லது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies