Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

சுவையான அத்திப்பழத்தில் இத்தனை மருத்துவ பயன்களா? Athipalam Nanmaigal !! Lansium health benefits !! அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

சுவையான அத்திப்பழத்தில் இத்தனை மருத்துவ  பயன்களா? Athipalam Nanmaigal !! Lansium Health Benefits !! What are the benefits of Athipalam !! Athipalam Benefits Tamil


Athipalam Nanmaigal


அத்தி பழத்தை ( Lansium Fruit) (Fig Fruit) பிட்டு பார்த்தால் அத்தனையும் சொத்தை எனும் பழமொழிக்கு மாறாக அத்தி பழம் உள்ளே  என்னதான் சொத்தை போல காணப்பட்டாலும் அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.


சீமை அத்திநாட்டு அத்தி என இரண்டு வகைகள் அத்திப்பழத்தில் உள்ளன. Fig Fruit பழத்தின் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.ஒவ்வொரு பழமும் வெளிப்புற நிறத்தோற்றத்திலும் சுவையிலும் மாறுபட்டு காணப்படும். 


நாட்டு அத்தி பழங்கள் (Athipalam) வெளிப்புறத்தில் ஊதா நிறம்போன்ற தோற்றத்திலம் உட்புறமாக கரு ஊதா நிறத்திலும் காணப்படும் இவை அதிக இனிப்பு மற்றும் சிறுது புளிப்பு   கலந்த சுவையுடனும் இருக்கும்.


சீமை அத்தி பழங்கள் வெளிப்புறத்தில் பச்சை நிறத்திலும் உட்புறம்  பிங்க்
 ( ரோஸ் ) நிறத்திலும் காணப்படும் இவ்வகை பழங்கள் இனிப்பு சுவையில் சற்று குறைந்த அளவே கொண்டுள்ளன. (Athipalam Benefits)

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்:


  • உடல் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய பழ வகைகளில் ஒன்று அத்திப்பழம் (Fig Fruit) அதில் வைட்டமின் ஏ, சி, பி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் சத்து, காப்பர் ஆகியவை அடங்கியிருக்கின்றன. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் உடல் ஆரோக்கியத்திற்கு  அத்திப்பழம் (Lansium) நன்மை அளிப்பதாக சொல்லப்படுகிறது. 

  • மலசிக்கல் பிரச்னை உள்ளவர்கள் அத்திப்பழத்தை (Fig Fruit) தினமும் காலையில் வெறும் பழத்தையோ அல்லது தேனில் ஊற வைத்தோ உண்டு வந்தால் செரிமான மண்டலத்தை சரியாக இயங்க வைத்து செரிமான கோளாறுகளை நீக்கி மலசிக்கல் முற்றிலும் குணமாகும். 

  • தினமும் 2 அத்திப்பழம் (Fig Fruit) சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். Figs Benefits.


  • போதைப்பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை கட்டுப்படுத்த அத்திப்பழத்தை (Athipalam Benefits) வினிகரில் ஒரு வாரம் ஊறவைத்து, நாள் ஒன்றுக்கு இரண்டு பழங்கள் சாப்பிடலாம். இதை தக்க மருத்துவ ஆலோசனையின் பேரில் மேற்கொள்வது அவசியம்.

  • கர்ப்ப காலத்தில் பெண்கள் அத்திப்பழம் உண்பதால் அதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஏராளமான வைட்டமின் சத்துக்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளித்து குழந்தை மிக ஆரோக்கியமாக வளர  உதவுகிறது. (Fig in Pregnancy)

  • வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் ஆகிய குறைகளை குணமாக்க அத்தி மர இலையை கொதிக்கும் நீரில் இட்டு, அதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம்.

  • வாத நோய் மற்றும் மூட்டு வலியால் சிரமப்படுபவர்கள் அத்தி மரப் பட்டையை இரவில் ஊறவைத்த நீரை, காலையில் குடித்து வர பலன் (Figs Benefits ) கிடைக்கும். 


  • சீமை அத்திப்பழம் (Athipalam Benefits) வெண் குஷ்டத்தை குணமாக்கும் தன்மை கொண்டதாக சொல்லப்படுகிறது. புற்றுநோயையும் தடுக்கும் திறன் அத்திப் பழத்திற்கு உண்டு, நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கவும் பயன்படுகிறது. அதனால் அத்திப்பழங்களை தினமும் சாப்பிடலாம்.


  • அடிக்கடி அத்திப்பழம் (Athipalam Benefits) சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள உப்பின் அளவு சமநிலை பெற்று ரத்த அழுத்த பாதிப்புகள் குறைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் பசும்பாலில் சில காய்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்து, காலையில் அந்த பாலை அருந்தினால் உடல் பலம் பெற்று, நரம்புக் குறைபாடுகளும் நீங்குவதாக வைத்திய முறைகள் குறிப்பிடுகின்றன.

  • மலட்டுதன்மை மற்றும் ஆண்மை கோளாறு உள்ளவர்கள் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள வேதி பொருட்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் அண்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பை ஊக்குவித்து ஆண்மை கோளாறு பிரச்சனையை சரி செய்கிறது .

  • வாரம் இருமுறைகள் அத்திப்பழம் (Athipalam) சாப்பிட்டு வந்தால் கண்பார்வை மேம்படும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முடி உதிர்வை அத்திப்பழம் சாப்பிடுவதால் சரி செய்யலாம்.

  • அத்திப்பழத்தை தினமும் உண்டுவந்தால் இதய சம்பத்தை பட்ட நோய்களிலிருந்து தப்பிக்கலாம், அத்திப்பழத்தில் கொழுப்பை கரைக்க கூடிய முக்கிய வேதி காரணிகள் உள்ளன. அந்த வேதி பொருட்கள் ரத்தத்தில்  உள்ள கொலஸ்ட்ராலை விரைவில் கரைத்து ரத்த குழாய்களில் அடைத்து கொள்ளாமல் பாதுகாக்கின்றன. இதனால் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு  (Heart  Attack) வராமல் தடுக்க படுகிறது.

  • சர்க்கரை நோயாளிகள் தினமும் அத்திப்பழம் (Figs Benefits) சாப்பிட்டு வந்தால் அத்திப்பழத்தில் உள்ள வேதி மூலக்கூறுகள் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து ரத்த  சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

வாயுத்தொல்லை ! ஜீரண கோளாறு ! கல்லீரல் பிரச்னை பிரச்சனைக்கான எளிய மருத்துவ குறிப்புகள்:- 👈 கிளிக் செய்யவும்


  • உலர்ந்த அத்திப்பழத்தில் ( Anjeer Benefits) இரும்புச்சத்து கூடுதலாக உள்ளதால் ரத்த சோகைக்கு தீர்வாக அமையும். அத்தி இலையை உலர வைத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு தேவைப்படும் 3 சதவீதம் கால்சியம் அதன் மூலம் கிடைக்கும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்.



கருத்துரையிடுக

3 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. At the end of that year, the cost for the plans is going to go up in 2015. I can guarantee that that's going to happen, because the young healthy people are not going to be motivated to get into the plans. Händedesinfektionsmittel

    பதிலளிநீக்கு
  2. By the time the information gets widely distributed, the actual regulations and rules get twisted and distorted, and what actually shows up in the media sometimes just doesn't truly represent the reality of what the regulations say. where can i but cbd and thc capsules near me

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies