ஐசிசி சொல்லும் விதிகள் இந்தியாவிற்கு சாதகமா? !!! இந்திய இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டி நிறுத்தம் !!! இந்தியா வெற்றியாளராக அறிவிக்கபடுமா? !!! india vs england all test series results 2021 !!! India tour of England !!! India vs England News - Ind vs Eng 2021 !!! IND vs ENG Test Results
LV இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஸ்பொன்சார்ஷிப்பில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது மிகவும் விறுவிறுப்பாக இங்கிலாந்தில் நடந்து வந்தநிலையில் திடீரென கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி துவங்க இருந்த நிலையில் 5வது டெஸ்ட் போட்டியானது போட்டி ஆரம்பிக்கும் சிறுது மணி நேரத்துக்கு முன்னரே கொரோனா தோற்று பரவல் அச்சம் காரணமாக ரத்தானதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. 5 போட்டிகல் கொண்ட இந்த தொடரில் இதுவரை நடந்த நான்கு போட்டிகளின் முடிவின் அடிப்படையில் நமது இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்துவருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த திடீர் அறிவிப்பால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். இந்த அறிவிப்பிற்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அனைவரிடமும் இந்த போட்டியில் வெற்றி பெற்றது யார் என அறிவிக்கபடும்? இந்த தொடர் யார் வென்றதாக அறிவிக்கபடும்? 5வது டெஸ்ட் போட்டி மீண்டும் நடக்குமா நடக்காத என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
மேலும் 5வது போட்டி ரத்தானதாக அறிவிக்க பட்டதை தொடருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் இந்த போட்டி நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த தொடரை வென்றது எந்த அணி? என்று ஐசிசி (ICC) தலைமையே விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் முறையீடு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
ஐசிசி கவுன்சில் பதில்கள் என்னவாக இருக்க வாய்ப்பு :
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது போட்டி உண்மையாகவே கொரோனா தோற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தால் இரண்டு அணிகளுக்குமே புள்ளிகள் ஒதுக்கப்படாது. இந்நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. உண்மையில் 5வது போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்படாமல் இந்திய அணி IPL தொடர் நெருங்கிய காரணத்தால் அதில் பங்கேற்க தானாக விலகி இருந்தததாக கூறப்பட்டால் ICC இங்கிலாந்து அணி 5வது போட்டியில் வெற்றியாளராக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு ஐசிசி இடம் இருந்து பதில் வந்தால் LV இன்சூரன்ஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்ததாக அறிவிக்க படும்.
மேலும் ஐசிசி விதிகளில் ஒன்று கூறுவதாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் விதிகளின் அடிப்படையில் இரு அணிகளில் ஒன்று விலகினாலோ அல்லது இரு அணிகளும் சேர்ந்து போட்டியை ரத்து செய்தாலோ எந்த அணிக்கும் வெற்றி புள்ளிககள் அறிவிக்கபடாது ஆகையால் இந்த விதியின் அடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தொடர் கோப்பை வழங்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால் டெஸ்ட் போட்டியானது கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்படவில்லை மேலும்இந்திய அணி வீரர்கள் தங்கள் நாட்டின் முக்கிய கிரிக்கெட் தொடரான IPL ஐ வெற்றிகரமாக நடத்தி முடிக்க அதன் நலன் கருதியே 5வது டெஸ்ட் போட்டியை நிறுத்திவிட்டு இங்கிலாந்தை விட்டு விரைவில் வெளியேறிதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தரப்பில் ஐ.சி.சி தலைமையிடம் புகார் அளித்து மேலும் தற்போது சில இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் IPL போட்டியை புறக்கணித்து வருகிறார்கள்.