போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டம் !!! போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் !!! Post Office Monthly Income Scheme !!! Post Office Savings !!! Senior Citizen Savings Scheme - India Post !!! Post Office Saving Schemes !!! Which scheme has highest interest rate !!! Post Office Scheme in Tamil !!! Which Is Best Scheme in Post Office !!! India Post Savings Scheme
பணம் பத்தும் செய்யும் என்பார்கள் ஆனால் பணத்தை வைத்து நம்மால் நினைத்ததை எல்லாம் வாங்கிவிட முடியாது அதுவே எல்லாரும் அறிந்த உண்மை. ஆனால், நம்முடைய வளமான செழிப்பான வாழ்வுக்கு பணத்தின் ஆத்திவசியம் மிக அதிகமாக உள்ளது.ஒருவர் பணத்தைச் சம்பாதிப்பதை விட அதைச் சேமிப்பதே மிக தடிமனான ஒன்று.
எப்போதும் ஒருவர் தனது செலவு போக மீதியை சேமிக்க கூடாது, சேமித்ததை போக மீதியை செலிவிட வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
Post Office Saving Schemes:
தற்போதய காலகட்டத்தில் சம்பாத்தியம் அனைத்தையும் செலவு செய்துவிட்டு எதிர்காலத்தில் அவசரத் தேவைக்கு ஒன்றும் இல்லாத நிலை ஏற்பட்டு அடுத்தவரிடம் கை ஏந்தும் நிலைமையில் இல்லாமல் இருக்க சேமிப்பு மிக மிக அவசியம். இதற்காகவே சேமிப்புப் பழக்கத்தை மக்கள் மத்தியில் அதிகரிக்க இந்திய தபால் துறை பல்வேறு அசத்தலான திட்டங்களைச் அறிமுக படுத்தி நடைமுறையில் பல்வேறு மக்களால் பயன்படுத்த பட்டு வருகின்றன. இந்திய அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இத்திட்டங்களில் எவ்வித உழைப்பும் இன்றி அதிகப்படியான வட்டி லாபம் கிடைக்கிறது.
எவ்வாறு சேமிக்க வேண்டும்:
இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு. நமது நாட்டில் பல்வேறு நிறுவனங்களால் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அறிமுக படுத்த பட்டு நடைமுறையில் இயங்கி வருகின்றன. ஆகியால் ஒருவர் சேமிக்க தொடங்கும் முன்னர் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் பற்றி பல்வேறு நிறுவனங்களில் விசாரித்து தொடங்குவதில் நன்று. ஏனென்றால் சேமிப்பு என்பது எவ்வளவு அவசியமான ஒன்றே அதே போல தகுந்த நேரத்தில் சரியான சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது மிக முக்கியமானது. இவ்வாறு தேர்ந்தெடுத்து சரியான திட்டத்தில் முதலீடு செய்தால் மட்டுமே மிக பெரிய லாபத்தை குறைந்த காலத்தில் பெற முடியும். இவ்வாறு அலசி ஆராய்ந்து தனது சேமிப்பை தொடங்குவதன் மூலம் மாதம் மாதம் பெரிதான லாபம் கிடைத்தால் தான் வருமானம் பெருகி விரைவில் செல்வந்தனாக மாற முடியும்.
நம்முடைய இன்றைய சேமிப்பு நம்மை நாளை பாதுகாக்கும் ஆனால் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு பாதுகாப்பு மேலும் முதலீடு செய்த தொகை எதிர்பார்த்ததை போல நல்ல லாபம் பெற்று தர வேண்டும் என பலதரபட்ட கேள்விகள் மக்களை அச்சத்திற்கு கொண்டு இவை அனைத்திற்கும் இந்திய அஞ்சல் துறை முற்று புள்ளி வைக்கும் அளவிற்கு மாதாந்திர வருவாய் திட்டம் என ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
மாத வருமானத் திட்டம்: Post Office Monthly Income Scheme:
👍18 வயது நிறைவு செய்த நபர் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து பணத்தை சேமிக்கலாம். தனியாகவோ அல்லது ஜாயிண் அக்கவுண்டாகவும் தனது கணக்கை தொடங்கி பணத்தை சேமிக்கலாம்.
👍வங்கிகளில் நிலையான வைப்புத் தொகை திட்டத்தைப் (Fixed Deposit ) போல, தபால் நிலையங்களில் மாதாந்திர அல்லது மாத வருமானத் திட்டம் அறிமுக படுத்தப்பட்டு ஏராளமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
👍இந்த திட்டத்தின் கீழ் சேரும் அனைவருக்கும் வட்டி விகிதம் 6.6 சதவீதமாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
👍தனி நபர் கணக்காக தொடங்கி இருந்தால் அதிகபட்சமாக இத்திட்டத்தில் ரூ.4.50 லட்சம் சேமிக்கலாம். இணைப்புக் கணக்காக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையில் டெபாசிட் செய்ய முடியும்.