Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

எலக்ட்ரிக் மோட்டார் வாகனங்கள் வாங்குவது சிறந்ததா? ! Electric Bike Advantages and Disadvantages in Tamil ! மின்சார மோட்டார் வாகனங்களின் நிறைகள் மற்றும் குறைகள்

Electric Bikes !!! Electric Bike Problems !!! Best Electric Bikes and Scooters in India !!! Electric Bikes: Pros and Cons !!! Which Is the Cheapest Electric Bike in India? !!! Images of Electric Scooters and Bikes !!! Disadvantages of Electric Scooter !!! Electric Scooter

Electric scooty review

இன்றைய காலகட்டங்களில் அறிவியல் துறை அசுர வளர்ச்சி அடைந்து வருவதால் அதற்கேற்ப நம் உபயோகப்படுத்தி வரும் ஏராளமான பொருள்களும் இன்றைய காலா தொழிநுட்பத்திற்கேற்றவாறு மாற்றம் அடைந்து வருகின்றன. அதில் ஒன்று மோட்டார் வாகனங்கள் (Electric Bikes).

இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதாவது பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் போன்ற பொருள்களின் விலையும் உயர்ந்து கொண்டு வருவதால் அதன் உபயோகம் இல்லாமல் மின்சாரத்திரத்தை பயன்படுத்தி வாகனங்கள் இயங்குமாறு கண்டுபிடிக்க  பட்டு சமீபத்தில் அறிமுக படுத்தப்பட்டு ஏராளமான மக்களால் பயன்படுத்த பட்டு வருகிறது. இந்த மின்சார மோட்டார் வாகனங்களில் ஏராளமான நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன.

TVS iQube pros and cons

மின்சார மோட்டார் வாகனங்களில் ((Electric Bikes)) உள்ள நிறைகள்:

The Main Advantages of Electric Bikes:

👉மின்சார மோட்டார் வாகனங்களில் முக்கியாகமக எரிபொருள் செலவு குறைவு.

👉மின்சார மோட்டார் வாகனங்களை அடிக்கடி சேவை செய்ய தேவை இல்லை. சில மாதங்களுக்கு ஒரு முறை பேட்டரி திறன் மற்றும் மோட்டார் சரி பார்க்க வேண்டும். அதற்கு ஆகும் செலவும் மிக குறைவே.

👉மின்சார மோட்டார் வாகனங்களில் (Electric Bikes) என்ஜின் ஆயில் மாற்றும் இதர ஆயில்கள் மாற்றும் செலவு இல்லை. ஏனென்றால் வண்டி இயங்குவது மோட்டரை பயன்படுத்தி மட்டுமே.

👉மின்சார மோட்டார் வாகனங்களில் (Electric Scooter) எவ்வளவு வேகமாக சென்றாலும் அதிர்வு மிக மிக குறைவாகவே இருக்கும். மேலும் இந்த வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களை போன்று எவ்வித சத்தத்தைத்யும்  ஏற்படுத்தாது.

👉பெட்ரோல், டீசல் வாகனங்களை போன்று மின்சார மோட்டார் வாகனங்கள்  மழை மற்றும் குளிர் காலங்களில் Starting பிரச்சனையை ஏற்படுத்தாது.

👉மின்சார மோட்டார் வாகனங்களில் பேட்டரி மற்றும் மோட்டார் மட்டுமே இருப்பதால் வண்டியின் எடை மிக குறைவாகவே உள்ளது. இதனால் சிறியவர் மற்றும் மகளிர்களுக்கு இவ்வாகனத்தை எளிதாக கையாள முடியும்.

👉மின்சார மோட்டார் வாகனங்கள் (Electric Bikes) எவ்வித புகையையும் வெளியிடுவதில்லை. அதனால் சுற்று சூழல் மாசுபாடு முற்றிலும் தடுக்க படுகிறது.


மின்சார மோட்டார் வாகனங்களில் உள்ள குறைகள்:

What Are the Disadvantages of Electric Bikes:

👉மின்சார மோட்டார் வாகனங்களில் (Electric Bikes) 1 கிலோ வாட் பேட்டரி பயன்படுத்தபடுகிறது அதன் விலை 50000 ரூபாய். மேலும் மூன்று வருடங்களுக்கு (3 Year ) மட்டுமே வாரண்ட்டி பேட்டரிக்கு உள்ளது அந்த காலம் வரை கம்பெனி கூறிய மைலேஜ் இந்த வாகனம் கொடுக்கும் அதன் பிறகு படிப்படியாக குறைய தொடங்கும்.

👉மின்சார மோட்டார் வாகனங்களை ஒரு முறை முழு சார்ஜ் செய்ய  கிட்ட தட்ட 6 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். அப்போது தான் கம்பெனி தரப்பில் கூறிய 70km வரை செல்ல இயலும்.

👉மேலும் மின்சார மோட்டார் வாகனங்களை (Electric Bikes) எப்போதும் வீட்டிற்குள் செடுத்து சென்று சார்ஜ் செய்ய இயலாது ஆகையால் வீட்டிற்கு வெளியில் பவர் பாயிண்ட் இருத்தல் அவசியம்.

👉இரவு நேரங்களில் மட்டுமே அனைவரும் மின்சார மோட்டார் வாகனங்களை சார்ஜ் செய்ய விரும்புவோம் ஆகையால் வீட்டிற்கு வெளியில் வண்டியை விட்டு சார்ஜ் செய்வதும் சிரமமே. வீட்டில் சரியான வசதி இல்லாதர்வர்களுக்கு வண்டி திருட்டு போகாமலே பார்த்துக்கொள்வது கடினமாக இருக்கும் 

👉மின்சார மோட்டார் வாகனங்களில் நெடுந்தூரம் பயணிக்க இயலாது. ஆகையால் இந்த வாகனங்கள் உள்ளூரில் மட்டுமே பயணிக்க சிறந்தது. பாட்டெரியில் சார்ஜ் தீர்ந்து விட்டால் மீண்டும் சார்ஜ் செய்து மட்டுமே செல்ல முடியும்.

👉தற்போது ஆங்காங்கே பெட்ரோல், டீசல் நிலையங்கள் இருப்பது போல மின்சார மோட்டார் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் எங்கும் இல்லை. எனவேமின்சார மோட்டார் வாகனங்களை எடுத்துக்கு கொண்டு கொண்டு நீண்ட தூரம் பயணிப்பது கடினம்.

👉பெட்ரோல் டீசல் வாகனங்களை போல மின்சார மோட்டார் வாகனங்களும், வேகமாக இயக்கினால் பேட்டரி திறனும் அதிகம் உறிஞ்சப்பட்டு மைலேஜ் குறையும். 

👉பெட்ரோல் டீசல் வாகனங்களை சில வருடங்களுக்கு பிறகு மற்ற நபர்களுக்கு விற்க முடியும் ஆனால் இந்த மின்சார மோட்டார் வாகனங்களை எவ்வாறு விற்பது என்பது கேள்வி குறியாக உள்ளது. ஏனென்றால் வருடம் கடக்க கடக்க பேட்டரி  திறன் குறைந்து விடும் ஆகையால் இரண்டாம் தரமாக வாங்கும் அந்த புதிய நபர் பேட்டரி திறன் குறைந்ததும் புதிய பேட்டரியை வாங்க ஏறத்தாழ 50000 ரூபாய் செலவு செய்ய வேண்டும்.

👉கடந்த சிலமாதங்களில் விற்பனைக்கு வந்த இந்த மின்சார மோட்டார் வாகனங்கள் மழைகாலங்களில் அடிக்கடி பேட்டரி பகுதியில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும் என்பதும் கேள்வியாக உள்ளது.

👉மின்சார மோட்டார் வாகனங்களை அணைத்து மெக்கானிக் கடைகளிலும் சர்வீஸ் விட முடியாது. உரிய மெக்கானிக் கடைக்கு எடுத்து செல்வதே மிக சிறந்தது.

👉உங்கள் ஊரில் எலக்ட்ரிக் வாகன சர்வீஸ் சென்டர் இல்லை என்றால் மின்சார மோட்டார் வாகனங்களை பழுது பார்க்க உரிய எலக்ட்ரிக் வாகன சர்வீஸ் சென்டர்க்கு எடுத்து செல்வது மிக கடினம்.

👉எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தபடும் பேட்டரிகள்  லித்தியம் சார்ந்தவை . இவ்வித பேட்டெரிக்கள் எளிதாக வெடிக்ககூடிய தன்மை கொண்டவை. ஆகையால் இதனை பயன்படுத்தும் பொது மிகுந்த கவனம் தேவை, ஏனென்றால் இது வெடிக்கும் தன்மை கொண்டது.

👉எலக்ட்ரிக் வாகனங்களில் (Electric Scooter) எவ்வித சத்தமும் வராது. மேலும் ஒரு சில வளைவுகளில் ஹார்ன் அடிக்காவிட்டால் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

👉எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் (Electric Scooter) கிட்டத்தட்ட ரூபாய் 1,00,000 மற்றும் அதனுக்கும் மேல் உள்ளது ஆகையயல் சாதாரண மக்களுக்கு இது சற்று பிரச்சனையாக இருக்கும்.

👉எலக்ட்ரிக் வாகனங்களை இரவு நேரங்களில் பயன்படுத்தும்போது  Light  விளக்குகளை பயன்டுத்துவதால் பேட்டரியில் சார்ஜ் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. இதனால் நாம் செல்லகூடிய தூரத்தை கூட சரியாக போக முடியாத சூழ்நிலை ஏற்படலாம்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies