Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

இரவு உணவு தாமதமாக உண்பவர்களா நீங்கள் 😱😱😱? இரவு உணவு தாமதமாக உண்பதால் ஏற்படும் உடல் உபாதைகள் !! What Happens if You Eat Too Late at Night

இரவு உணவு தாமதமாக உண்பவர்களா நீங்கள் 😱😱😱?!! இரவு உணவு தாமதமாக உண்பதால் ஏற்படும் உடல் உபாதைகள் !!! Night Eating Syndrome !!! Is It Bad to Eat Late at Night While Pregnant !!! Why Eating Late at Night May Be Particularly Bad !!! What Happens if You Eat Too Late at Night? !!! Ways to Stop Eating Late at Night !!! Does Eating Late at Night Cause Weight Gain !!! What Happens to Your Body When You Eat Late at Night?


காலை உணவினை பேரரசரைப் போலவும், மதிய உணவினை இளவரசரைப் போலவும், மாலை இரவு உணவினை ஏழையைப் போலவும் சாப்பிட வேண்டும் என்பது, உணவுமுறையை எடுத்துரைக்கும் வாழ்வியல் கூற்றாகும்.




மூன்று வேளை உணவையும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது போல, எந்தெந்த நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியமானது. அதில், இரவு உணவைப் பொறுத்தவரை 7 முதல் 9 மணிக்குள் சாப்பிடுவதே சிறந்தது.

ஆனால், இன்றைக்கு பணி நிமித்தமாக நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு, இரவு உணவை குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும், குறிப்பிட்ட அளவிலும் சாப்பிட முடிவதில்லை என்பதே உண்மை.


முறையற்ற நேரத்தில் பேரரசரைப் போலவே, நம்மில் பலர் இரவு உணவை சாப்பிடுகிறோம் என்பதை, பல்வேறு ஆய்வு முடிவுகள் முன் வைக்கின்றன. இந்த தலைகிழான நிலையால் ஏராளமான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.

சாப்பிட்ட உடனேயே உறங்கச் செல்வோருக்கு, இரைப்பையில் செரிமானத்திற்காக சுரக்கும் அமிலம், இரைப்பைக் குடலை நோக்கி மேலே ஏறுகிறது. இவ்வாறு தொடர்ந்து நடப்பதால், குடல் பகுதியில் புண்கள் உண்டாகின்றன. காலை நேரத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும்.


துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு தற்போது பரவலாக உள்ளது. அவற்றைப் போல, எண்ணெய்யில் பொறித்த உணவுகளும் இரவுக்கு ஏற்றவை அல்ல. அவை செரிமானமாக அதிக நேரம் எடுப்பதால், நம்முடைய ஓய்வுக்கு மிகவும் தேவையான, ஆழ்ந்த உறக்கத்தைக் கெடுக்கும் தன்மை கொண்டவை.

முடிந்தவரை இரவு நேரத்தில் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. அவை செரிமானம் ஆக நீண்ட நேரமாகும்.

தயிர், கீரை வகைகள் சார்ந்த உணவுகளை இரவில் தவிர்த்து விடுவதால், சில ஒவ்வாமைகளில் இருந்து தப்பிக்கலாம். அவற்றிற்கு மாற்றாக, காய்கறிகள் அடங்கிய சூப் வகைகள், மிளகு, மஞ்சள் கலந்த பால் ஆகியவற்றைப் பருகலாம்.

இவையெல்லாம் இரவு உணவில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகளாகும். இவற்றில் சற்றே கவனமாக இருந்தால், செரிமான மண்டலம் நிம்மதி அடையும். ஏனெனில், நாம் உறங்கி இளைப்பாறும் நேரத்தில்தான், செரிமான உறுப்புகளும் ஓய்வெடுக்கும். முறையற்ற இரவு உணவால், அதற்கு வாய்ப்பளிக்காவிட்டால், உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies