Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

சலிப்பு தெரியாமல் உங்கள் வீட்டை விரைவாக சுத்தம் செய்து அழகாக வைத்திருக்க குறிப்புக்கள் !!! How Can We Keep Our House Clean and Beautiful in Tamil !!! How to Keep a Clean House

How to Keep a Clean House !!! How Can We Keep Our House Clean and Beautiful !!! Housecleaning Tips to Keep Your Home Clean and Beauty !!! Home Organization Tips



வாழும் இடத்தை அழகாக வைத்துக்கொள்ளவே அனைவருக்கும் ஆசை. ஆனால், அதைச் செய்வதில்தான் நமக்குள் ஆயிரம் யோசனைகள், காரணம், தனியொரு மனுஷியாக எவ்வளவு வேலைகள்தான் செய்வது என்ற அலுப்பு. இதிலிருந்து நீங்கள் விடுபட, விடுமுறை நாட்களில் சக உறவுகளையும் உங்கள் பணியில் சேர்த்துக்கொள்ளுங்கள். கிண்டல் கேலியுடன், ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பும் தெரியாது, வீடும் அழகு பெறும்.

வீட்டைச் சுத்தம் செய்ய எண்ணரியதும் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, யார் யார் எந்தெந்த அறைகளை சுத்தம் செய்வது எனப் பிரித்துக் கொள்வதுதான். இறுதியில் யாருடைய அறை மிகவும் அழகாக இருக்கிறதோ, அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என உங்களுக்குள்ளேயே ஒரு போட்டியை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் வேலையின் வேகத்தை.

எந்தெந்த அறைகளை எப்படியெல்லாம் சுத்தம் செய்வது:

Home Organization Tips to Keep Your House Neat and Clean. Keep Your Home:

முழுமையாக தூசு நீக்குதல்: 

சுத்தம் செய்வதில் முதலில் கவனிக்க வேண்டியது தூசு, சிலந்தி வலை, பூச்சிகளின் எச்சம் போன்றவற்றைத் தான், அலமாரி, வீட்டின் உபகரணங்கள் என, அனைத்து பகுதிகளையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். வறண்ட தூசுகளை துணிகளைக் கொண்டு நீக்கும் முன் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. கண்ணுக்குத் தெரியும் பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், மூலை முடுக்குகளிலும் முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் உள்ளறை அழகு பெறும்.


Home Organization Tips

உறைகளை அகற்றுதல்: 

தூசு மற்றும் ஒட்டடை அடித்த பிறகே தலையணை, படுக்கை விரிப்பு, சாப்பாட்டு மேசை விரிப்பு, அலமாரி களில் உள்ள விரிப்புகள், இருக்கை உறைகள் என அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். இவற்றை சோப்பு நீரில் ஊறவைத்து துவைத்து சுத்தம் செய்து உலர்த்திப் பாருங்கள். உறைகள் பளிச்சென மிளிரும்.


Home Organization Tips

கண்ணாடி சுத்தம்:

டி.வி, ஃப்ரிட்ஜ், கணினியின் திரை ஆகியவற்றை லேசான அடர்த்தி கொண்ட திரவங்கள் மூலம் சுத்தம் செய்யலாம். கண்ணாடி, சுவர் கடிகாரம் போன்றவற்றை உலர்ந்த துணியால் ஒரு முறை சுத்தம் செய்துவிட்டு, பிறகு ஈரத்துணியால் துடைக்க வேண்டும். உலர்ந்த துணியைக்கொண்டு மீண்டும் துடைக்கும் போது உங்களின் அழகு முகம் அதில் ஜொலிப்பதை நீங்களே கானலாம்.


Home Organization Tips


குளியலறை, கழிவறை, படுக்கை யறை சுத்தம்:

எந்த ஒரு வீட்டிலும் குளியலறை, கழிவறை, படுக்கையறை இவை மூன்றும் ஈரத்தன்மை இல்லாமல் உலர்ந்து இருக்க வேண்டும். அப்போதுதான் அறைகளில் கசடுகள் சேராமல், எப்போதும் கலர்ஃபுல்லாகக் காட்சியளிக்கும். குளிய லறையில் இருக்கும் அலமாரி, கழிவறை, குளியல் டப், பக்கெட் என அனைத்தையும் அவ்வப்போது தேய்த்து சுத்தம் செய்வது நல்லது. அதேபோல் கதவு, டைல்ஸ் என அனைத்தையும் வாசனை திரவியம் கொண்டு மாதம் ஒருமுறை சுத்தம் செய்தால் அறை மணக்கும்.


Home Organization Tips

வீட்டு சுத்தம் என்பது நம் ஆரோக்கியத்துக்கு முக்கிய மானது. அதை தனியாக செய்யாமல், விடுமுறை நாட் களில் அனைவரும் இணைந்து செய்யும் போது, மனை அழகு பெறுவதுடன் மனங்களிடையே மகிழ்ச்சியும் கூடும்.

சமையலறை: Kitchen and Home Cleaning Ideas

இல்லத்தரசிகள் அதிக நேரத்தை செலவிடுவது சமையல் அறையில்தான். சமையலறையின் அமைப்புக்கு ஏற்ப, அழகுணர்ச்சியும், சுத்தமும் வெளிப்படும்படி உள்கட்டமைப்பில் சிறிய மாற்றங்களைச் செய்வது, அங்கு உள்ள பொருட்களை சுத்தமாக பராமரிப்பது போன்றவற்றால் 'சமையல்' செய்வது புத்துணர்வை அளிக்கும் அனுபவமாக மாறிவிடும். அதற்காக, உள்கட்டமைப்பு நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்ற அவசியமில்லை. ஆர்வமுள்ள இல்லத்தரசிகள் தாங்களே சில மாற்றங்களை செய்து, சமையலறையை அழகாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அதற்கான எளிய குறிப்புகளை இங்கே காணலாம். 


Home Organization Tips

சமையலறை வடிவமைப்பை மனதில் கொண்டும், எரிவாயு அடுப்பு வைக்கப்பட்ட இடத்தை பொறுத்தும், பொருட்களை சரியான முறையில் அடுக்கி வைப்பது அவசியம். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களையும், கூடுதலான பாத்திரங்களையும் ஸ்டோர் ரூமில் வைக்கலாம். இதனால் வேலை செய்வதற்கு வசதியாக இருக்கும்.

எரிவாயு அடுப்பு வைத்துள்ள மேடையின் மீதும், அடுப்புக்கு பக்கத்திலும் எண்ணெய், பருப்பு, சிறிய பாத்திரங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும், அவ்வாறு செய்வதன் மூலம் பாதுகாப்பாத சமையல் செய்ய முடியும்.

பூஜைகள் மற்றும் விரத நாட்களில் பயன்படுத்தும் பாத்திரங்கள், விருந்தினர்களின் உபயோகத்துக்கான பாத்திரங்கள், அன்றாட பயன்பாட்டில் இல்லாத பெரிய பாத்திரங்கள் ஆகியவற்றை அலமாரியின் மேல் அடுக்கில் வைக்கலாம்.

'சிங்க' (Wash  Basin)அருகிலேயே பாத்திரங்களை கழுவி, அடுக்கி வைக்கும் 'டிரே' அமைத்துக்கொள்ளலாம். டிரே' வகைகளைத் தனித்தனியாக இல்லாமல், அடுக்குகளாக பயன்படுத்துவதே இட வசதியை அளிக்கும்.


Home Organization Tips


மளிகை பொருட்களை சேமித்து வைக்கும் பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் டப்பாக்களை ஒரே அளவு கொண்டதாக வாங்கி, அலமாரியில் அடுக்கி வைக்கலாம். அதனால், அவற்றை எளிதாக பயன் படுத்த முடிவதுடன், இட வசதியும் கிடைக்கும்.

' அலமாரி கதவுகளில் பொருத்தப்பட்ட 'ஹோல்டர்களில்' துணிப்பைகளை மாட்டி, அதில் சிறிய பொருட்களை வைத்துக் கொள்ளலாம். சுவரில், ஆணிகள் பொருத்தப்பட்ட மரச்சட்டங்களை பொருத்தி, அதில் கரண்டி மற்றும் 'நான் ஸ்டிக் பாத்திரங் களை தொங்கவிட்டுக் கொள்ளலாம்.

ஸ்பூன்களை போட்டு வைப்பதற்கான 'ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் ஸ்டேண்டு அல்லது ஹோல்டர்கள்' பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. அவற்றில் ஸ்பூன், ஃபோர்க் மற்றும் கத்தி ஆகியவற்றை போட்டு வைத்தால், எடுப்பதற்கு எளிதாக இருக்கும்.

பயன்படுத்தாத அட்டைப் பெட்டிகளை மடித்து, அவற்றின் மீது மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதால், மேடையின் மீது கறைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

சமையல் பணிகளை மேற்கொள்ளும்போது, தரைத்தளத்துக்கு பொருத்தமான, வழுக்காத மிதியடிகளை பயன்படுத்துவது நல்லது. அதன் மூலம் அதிக நேரம் நின்று கொண்டிருப்பதால் பாதங்களில் உருவாகும் பித்த வெடிப்பு மற்றும் கால்களில் ஏற்படும் வலியை தவிர்க்கலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies