Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

சங்கு பூ மருத்துவ பயன்கள் ! Blue Tea Health Benefits in Tamil ! புற்றுநோய் ! சர்க்கரை நோய் ! கல்லீரல் நோய்களை விரட்டி அடிக்கும் சங்கு பூ டீ

சங்கு பூ மருத்துவ பயன்கள் !!! Blue Tea Health Benefits in Tamil !!! புற்றுநோய் !!! சர்க்கரை நோய் ! கல்லீரல் நோய்களை விரட்டி அடிக்கும் சங்கு பூ டீ !!!  Benefits of Blue Tea !!! Butterfly Pea Flower !!! How to Make Blue Tea !!! Sangu Poovin Maruthuva Kunangal !!! Ways To Reduce Stress


புளூ டீ (Butterfly Pea Tea) :-

உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தால் டீ , காபி அருந்தும் நீண்ட கால பழக்கத்தையே பலரும் தவிர்த்து விட்டனர். சிலர் அதன் தொடர்ச்சியாக 'கிரின் டீ' போன்ற பானங்களை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உடல் எடையைச் சீராக வைத்து கொள்ள 'கிரின் டீ' உதவி புரிவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 


Butterfly Pea Tea

Blue Pea Flower

தினமும் காலையில் பருகுவதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்பட்டு, புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. அதேபோல இயற்கை ஆர்வலர்களால் குறிப்பிடப்படும் இன்னொரு வகை 'புளூ டீ ' (Blue Tea) ஆகும். அதன் பெயருக்கான காரணம், நீல நிற சங்குப் பூவின் (Blue Pea Flower) மூலம் தயாரிக்கப்படுவதாகும். 

புளூ டீ -யின் மருத்துவ பயன்கள் :-

Blue Tea Benefits :-

😀ஒவ்வொரு பூவுக்கும் குறிப்பிட்ட மருத்துவக் குணம் இருக்கிறது. அதன் அடிப்படையில், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நீல நிற சங்குப் பூ (Sangu Poo) கொண்டு தயாரிக்கப் படும் 'புளூ டீ' உடல் நலனுக்கு ஏற்றதாக சொல்லப்படுகிறது. அதில் 'ஆன்டி கிளைகோஜன்' இருப்பதால் வயது முதிர்வை தடுத்து, இளமையைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. 

😀தலையின் மேற்பாகத்தில் அமைந்துள்ள நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டக் கூடியது Blue Pea Flower. 

😀உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவுவதாகவும் ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

😀'புளூ டீயில்'  (Blue Tea) இருக்கும் 'ஃப்ளேவனாய்ட்ஸ்' என்ற ரசாயனம் புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கிறதாம். அத்துடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுக்களிலிருந்தும் பாதுகாப்பதாக சொல்லப்பட்டுள்ளது. 

😀கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் காரணமாக எடை அதிகமாக உள்ள வர்களுக்கு 'புரூ டீ ' (Butterfly Tea) பெரிதும் உதவியாக இருக்கிறது. தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் அதற்கு உண்டு. 

😀வேலைப்பளுவின் காரணமாக உரிய நேரத்திற்குச் சரியாக சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கு நாளடைவில் குடற்புண் பாதிப்பு ஏற்பட்டு விடலாம். அவர்களுக்கு பயன் அளிக்கக்கூடிய பானமாக 'புளூ டீ' (Blue Butterfly Pea Tea) உள்ளது. 

😀மேலும், Blue Pea Flower அஜீரணத்தை குணமாக்குவதுடன். வயிற்றில் உண்டாகும் எரிச்சலையும் தடுக்கிறது. 

😀அதுமட்டுமல்லாமல் உடலின் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்ளவும் துணை புரிகிறது. உடல் வெப்பம் சீரற்ற நிலையில் இருப்பவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சுறுசுறுப்பாக செய்ய இயலாது. 

😀குறிப்பாக, 'புளூ டீ' (Pea Tea) அருந்துவதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது, மன அழுத்தத்தை தவிர்க்க உதவுவதாகும். 


முட்டையை ஃபிரிட்ஜில் வைத்து உண்பது மிக ஆபத்தா? 😱Why Should Not Keep Eggs in Fridge : 👈👈👈 மேலும் படிக்கச் கிளிக் செய்யவும் 


'புளூ டீ ' தயாரிப்பது எப்படி :- 

How to Make Blue Tea :-

கொதிக்க வைத்த தண்ணீரில் சில சங்குப் பூக்களை (Butterfly Pea) போட்டு, 5 நிமிடம் கழித்தவுடன் இறக்கி வடிகட்டிக்கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சைச் சாறு சில சொட்டுகள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம்.

முக்கிய குறிப்பு :-

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் கட்டாயம் தரும் மருத்துவ ஆலோசனையின்றி 'புளு டீ'  (Butterfly Tea) அருந்தக்கூடாது.


மன அழுத்தத்தை போக்கும் வீட்டு தாவரங்கள் :-

Ways To Reduce Stress :-

பச்சைப் பசேலென்ற சூழல் ரம்மியமூட்டுவதுடன் மனதுக்கு அமைதியைத் தரும். கண் இமைகளை அசைக்காமல் சில நிமிடங்கள் மரம், செடிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே எத்தகைய மன அழுத்தம் இருந்தாலும் அவை நம்மைவிட்டு விலகிவிடும். இன்றைய சூழலில் பசுமை நிறைந்த இடங்களை தேடிப்போக முடியாது. நாம் வசிக்கும் இடங்களிலேயே பசுமையான சூழலை உருவாக்கி மகிழலாம்.

செடி வளர்ப்பதில் பலருக்கு ஆர்வம் உண்டு, சிலர் பொழுதுபோக்குக்காக செடி வளர்ப்பார்கள். இன்றைய கொரோனா காலகட்டத்தில் அது பேருதவியாக இருக்கும். எங்கு திரும்பினாலும் கொரோனா பற்றிய செய்திகள் மனதை பதைபதைக்க வைக்கின்றன. தொலைக்காட்சிகள், சமூகவலைத் தளங்களில் கொரோனா குறித்த எதிர்மறையான தகவல்கனையே காணமுடிகிறது. 

தோட்டக்கலையில் ஆர்வம் காட்டுவதன் மூலம் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு கிடைக்கும். மணி பிளான்ட் போன்ற அழகுச் செடிகளை வளர்த்தால் அவை சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவதுடன் நமக்கு பல்வேறு பலன்களை அள்ளித் தரும். அவை குறித்து பார்ப்போம்.

வீப்பிங் ஃபிக்/ ஃபைக்கஸ் பென்ஜமிளா :-

வீட்டின் வெளிப்புறம் மட்டுமல்லாமல் வீட்டின் உள்ளேயும் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் இவை. காற்றில் உள்ள போர்மால்டிஹைடு, பென்சீன், டிரை குளோரோ எத்திலின் போன்றவற்றை அழித்து காற்றை சுத்தப்படுத்தும்,

மணி பிளான்ட் (போதோஸ்)  :-

மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்த்தால் பணம் கொட்டும் என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மணி பிளான்ட் வளர்த்தால் பணம் வருகிறதோ இல்லையோ சுத்தமான காற்று கிடைக்கும். வீட்டைச் சுற்றியோ அல்லது வீட்டின் உள்ளேயோ மணி பிளான்ட் செடியை வளர்த்தால் அது காற்றிளை மாசுபடுத்தும் நச்சுப்பொருட்களை உட்கிரகித்து காற்றை சுத்திகரிக்கும்.

அரிகா பால்ம் :-

இந்தச் செடியை பராமரிப்பது சற்று சிரமமாக இருந்தாலும், காற்றை சுத்தப் படுத்துவதில் மிகச்சிறப்பாக செயலாற்றும் தாவரமாகும். இது ஆக்சிஜனை அதிக அளவில் உற்பத்தி செய்வதுடன் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். 

ஸ்நேக் பிளான்ட் -  மருள் :-

இந்தத் தாவரம் 100-க்கும் மேற்பட்ட காற்று மாசுபாடுகளை அழிக்கக்கூடியது. தண்ணீர் இல்லாவிட்டாலும்கூட பல நாட்கள் உயிர்ப்போடு இருக்கும். பொதுவாக இந்தத் தாவரத்தை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. இதை ஆங்கிலத்தில் 'மதர் இன் லா டங்' என்பார்கள். மாமியார் நாக்கு' என்று இதை கிண்டலாகச் சொன்னாலும் இந்தத் தாவரம் நமக்கு நல்லதையே செய்யும்.

தளபதி விஜயின் மகள் இப்ப எப்படி இருக்காங்கனு தெரியுமா? 

👆👆👆 மேலும் படிக்கச் கிளிக் செய்யவும் 


சைனீஸ் எவர்கிரீன் - அக்லோனிமா :-

இது மிக அதிக அளவில் ஆக்சிஜனை தயாரிக்கக்கூடியது. வீட்டில் பெரிதாக வெளிச்சம் இல்லாத இடத்திலும்கூட இந்தத் தாவரம் வளரும். எத்தனை செடிகள் வேண்டுமானாலும் வளர்க்கலாம். அறையில் வளர்ப்பது சிறந்தது.

இந்தச் செடி என்றில்லை இன்னும் பல செடிகள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு விருப்பமான செடி எதுவோ, உங்கள் வீட்டுக்கு எது பொருந்துமோ அதை வாங்கி வளர்க்கலாம். 

வீட்டை அலங்கரிப்பதுடன் காற்றைத் தூய்மைப்படுத்தி மனதுக்கு நிம்மதியை தரும். அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் தோட்டம் வளர்க்க நிலம் இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம். இவற்றை வீட்டின் உள்ளேயே வளர்கலாம். பெரிய அளவில் இடமும் தேவையில்லை, பராமரிக்கவும் தேவையில்லை . பூச்சிகள் வராமல் பார்த்துக்கொண்டால் போதும், பெரிய அளவில் செலவில்லாமல், பராமரிக்க நேரம் தேவைப்படாமல் இருப்பதால் இந்தத் தாவரங்களை வாங்கி வளர்க்கலாம். இவை தாமாகவே வளர்ந்து உங்களுக்கு நன்மை தரும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies