Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

How to Maintain Body Shape ! Tamil Tips for Weight Loss ! உடல் பருமனுக்கான காரணங்கள் ! உடலை ஸ்லிம்மாக சிக்குன்னு வைத்துக்கொள்ள இயற்கை மருத்துவ குறிப்புக்கள்

உடல் பருமனுக்கான காரணங்கள் ! உடலை ஸ்லிம்மாக சிக்குன்னு வைத்துக்கொள்ள இயற்கை மருத்துவ குறிப்புக்கள் ! How to Maintain Body Shape ! Tamil Tips for Weight Loss !  Diets to Lose Weight


weight loss tips at home


உடல் பருமனாக இருக்க முக்கிய கரணங்கள் :- 

எடையைக் குறைக்க முயற்சி செய்கிறீர்களா? பிடித்த சாப்பாடு அயிட்டங்களையெல்லாம் விட்டுட்டேன், தினமும் மாங்கு மாங்குனு நடக்குறேன், ஆனாலும் ஒடம்பு கொறயலையேன்னு" கவலைப்படுபவரா நீங்கள்? (diet plan for weight loss) 

ஒருவேளை, இங்கே குறிப்பிட்டுள்ள ஏதாவது தவறுகளை நீங்கள் செய்து கொண்டிருந்தால் அது கூட உங்கள் எடை குறையாமல் இருப்பதற்கு  முக்கிய காரணமாக இருக்க கூடும். 

  • தாமதமான இரவு உணவு, பணிபுரியும் பெண்கள், காலையிலிருந்து வேலை செய்த அலுப்பினால், வீட்டுக்கு வந்தவுடன் அப்படியே சோபாவில் சாய்ந்து டிவி பார்த்துவிட்டு, பொறுமையாக இரவு பத்து மணிக்குமேல் சாப்பிட்பால், செரிப்பதற்கு சிரமமாவதுடன், வளர்சிதை மாற்றம் குறைந்து உடலில் கொழுப்பு அதிகம் சேரும் ( diet plan for weight loss ). 

  • தூங்கும் பழக்கம், இரவு சீக்கிரமாக தூங்காமல், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் போன்றவற்றில் மூழ்கிவிட்டு தாமதமாக தூங்கி, சரியான நேரத்துக்கு எழாமல் இருந்தால் எடைக்கூடும். சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு, பசியைத்தூண்டும் ஹார்மோன்கள் சீராக இயங்காமல், கிடைத்ததையெல்லாம் சாப்பிடச்செய்து எடையை அதிகரித்து விடக்கூடும். வேகமாக சாப்பிடுவது நாம் சாப்பிட ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குப் பிறகே, நமது வயிறு நிறைந்துவிட்ட உணர்வு மூளைக்கு செல்கிறது. 

  • வேகவேகமாக சாப்பிடும் போது வயிறு நிறையாதது போலவே தோன்றுவதால், நம்மை அறியாமலேயே நிறைய சாப்பிடுவோம். மெதுவாக சாப்பிடும் போது வழக்கமாக சாப்பிடும் அளவைவிட குறைவாகவே சாப்பிடுவோம் (Tamil Tips for Weight Loss). 

  • காலை உணவைத் தவிர்ப்பது, 'நேரமில்லை' என்று காலை உணவை சாப்பிடா மல் தவிர்த்தால், உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காது. பசி உணர்வு அதிகரிக்கும். எனவே போண்டா, பர்கர் என்று நம்மை அறியாமல் நொறுக்குத்தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருப்போம். இதனால் எடை அதிகரிக்கும் (How to Maintain Body shape). 

  • பெரிய தட்டுகளில் சாப்பிடுவது, பெரிய தட்டுகளில் சாப்பிடும்போது, குறைந்த உணவு சாப்பிடும் உணர்வு தோன்றும். இதனால் பசி அடங்காதது போலவே இருக்கும். எனவே சிறிய தட்டுகளில், பொறுமையாக உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். 

  • குறைந்த அளவு தண்ணீர், குடிப்பது தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சோடா போன்ற பானங்கள் குடிப்பது போன்றவற்றால் ( diet plan weight loss ) உடல் எடை அதிகரிக்கவே செய்யும்.
  • கோபமாக இருக்கும்போது சாப்பிடுவது கோபம், படபடப்பு, பயம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளில் இருக்கும் போது நமக்கே தெரியாமல் அதிக அளவு உணவு சாப்பிடுகிறோம். எனவே இதுபோன்ற நேரங்களில் மனம் நிதானமான பிறகு சாப்பிடுவதே சிறந்தது. மேற்கண்டவையெல்லாம் நம்மை அறியாமலேயே நாம் செய்யும் தவறுகள். இதனால் எடையைக் குறைக்க நாம் எடுக்கும் முயற் சிகள் வீணாகின்றன. இவற்றை கண்டுபிடித்து சரி செய்து கொண்டால், நீங்களும் ஸ்லிம் பியூட்டிதான் போங்க ( weight loss tips at home ).

அழகான மற்றும் வசீகரமான உடலமைப்புக்கான  டிப்ஸ் :-  (How to Maintain Body Shape )

உடல் எடையை குறைப்பது மற்றும் கட்டுக்கோப்பாக இருப்பது போன்ற செயல்களில், பெண்கள் பெரும்பாலும் மிகக்குறைவாக சாப்பிடுவது, போதுமான அளவு வேலை செய்யாதது மற்றும் உடனடி முடிவுகளை எதிர்பார்ப்பது போன்ற தவறுகளைச் செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்ய நேரமில்லாமல், தங்கள் வேலையில் அதிகம் சிக்கிக்கொள்ளும் பெண்களுக்கான உடலை ஸ்லிம் ஆகா வைத்து கொள்ள சில வழிமுறைகள் கீழே Weight Loss Diet Plan !!!


ஆரோக்கியமான காலை உணவு :-

ஆரோக்கியமான காலை உணவு நாள் முழுவதும் ஆற்றலைத் தக்கவைக்க அவசியம். மூன்று வேளை உனாவில், காலை உணவுமிக முக்கியமானது. இது ஆரோக்கியமான மற்றும் சத்தானதாக இருக்க வேண்டும். நார்ச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின் கள் நிறைந்த உணவைத் தேர்ந் தெடுங்கள். ஏனெனில் இது நாள் முழுவதும் ஆற்றலை அளிக்கிறது. உடலின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.


பதப்படுத்திய மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்த்தல் :-

உடலை ஆரோக்கியமாகப் பராமரிப்பதற்கான முதல் விதி, பதப்படுத்திய மற்றும் எண் பொய் அதிகம் சேர்த்த உணவுகளை அன்றாட வழக்கத்திலிருந்து அகற்று வதே ஆகும். ஏனெனில் இது உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தையும் நோயெதிர்ப்பு மண்டலத் தையும் பாதிக்கும். எனவே புரதம், கால்சியம், கொழுப்பு கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக் கியமான சிற்றுண்டிக்கு மாறுவது எடையை பராமரிக்கவும் பல நோய்களின் அபாயத்தை குறைக்கவும் Weight Loss Diet Plan உதவும்.


கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி முறையைப் பின்பற்றவும் நடைப்பயிற்சி, ஓடுவது போன்ற எளிய பயிற்சிகளுடன் தினமும் பின்பற்ற வேண்டிய கட்டமைக்கப்பட்ட உடற் பயிற்சி முறையை பின்பற்ற வேண்டும். பெண்கள் தங்கள் உடற்பயிற்சி இலக்கை அடைய வாரத்தில் குறைந்தது மூன்று மணி நேரம் உடற்பயிற்சி weight loss tips at home செய்ய வேண்டும். 


தேவையான அளவு தண்ணீர் குடித்தல் உடற்பயிற்சி செய்யும்போது நிறைய வியர்வை வெளியேறும். எனவே தேவை யான அளவு நீரைக் குடிப் பது மிகவும் முக்கியம். சீரான இடைவெளி யில் தண்ணீர் குடிப் பது நீரிழப்பை ( drinks that burn fat ) தவிர்க்க உதவும்.


தேவையற்ற கலோரிகளைத் தவிர்த்தல் :-

குக்கிஸ்கள், சாக் லேட்டுகள், தேன் மற்றும் வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து நிறைந்த உணவுகளை பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ரத் தச்சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. அதிக இன்க லினை உற்பத்தி செய்கின்றன மற்றும் உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. எனவே தினசரி உணவில் புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக இருக்க வேண்டும்.


தொப்பையை குறைக்க உதவும் நீர் தெரபி :-

மனித உடலில் 70 சதவிதம் நீர்ச்சத்து உள்ளது. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற சத்துக்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நீர் சத்தும் உடல் ஆரோக் கியத்துக்கு மிக அவசியம் (weight loss foods). 


  • சருமத்தின் பளபளப்புக்கும், உடல் புத்துணர்ச்சி மற்றும் சுறு சுறுப்புக்கும், உடல் எடையை குறைக்கவும் ஜப்பானியர்கள் நீர் சிகிச்சை என்ற முறையை பின்பற்றுகிறார்கள். அது என்ன நீர் சிகிச்சை முறை? என்று நீங்கள் கேட்கலாம். 

  • காலையில் எழுந்தவுடன் தினமும் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். அந்த தண்ணீர் குளிர்ச்சியாகவும் சூடாகவும் இல்லாமல், மிதமான சூட்டில் இருக்க வேண்டும். காரணம், குளிர்ந்த நீர் உடலில் கொழுப்புகள் படிவதுடன், செரிமான செயல்பாட்டில் சிக்கல் ஏற்படுத்தவும் செய்யும். காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடல் சீரான செயல் பாட்டில் இருக்கும் என்பதால், அந்த நேரம் தான் நீர் சிகிச்சைக்கு ஏற்ற நேரமாகும்.

  • தண்ணீர் குடித்த பிறகு 45 நிமிடங்களுக்கு, எந்த வகையான உணவும் சாப்பிடக்கூடாது, மேலும், தண்ணீர் குடித்த பின்னரே பல் துலக்க வேண்டும். இதனால் உடலின் உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, உடல் உஷ்ணமும் குறையும். பின்னர், காலை உணவை நன்கு மென்று சாப்பிடவேண்டும் (Diets to Lose Weight).

  • இரண்டு மணி நேர இடைவெளிக்குப் பின்னர் பழச்சாறு அருந்தலாம். இந்த சிகிச்சைக்கு சுத்தமான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பகல் நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் பசியின்மை உண்டாகும். அதனால், அதிக அளவு உணவை எடுத்துக்கொள்ள இயலாது. மேலும், தண்ணீர் அதிகமாக பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் குறைந்து, எடை குறைவதற்கான சிறந்த வழியாகவும் அமையும். 

  • தினமும் நீர் சிகிச்சையை செய்து வந்தால், சிறிது காலத்திலேயே பல நல்ல பலன்கள் கிடைக்கும்.

  • நீர் சிகிச்சையின் இதர நன்மைகள்: - தொடர்ச்சியாக பத்து நாட்கள் மேற்கொள்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை அகலும். தினமும் காலையில் தண்ணீர் குடிப்பது மூளையின் செயல்திறனை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. 

  • ரத்த ஓட்டம் சீராக ஆவதால், ஆரோக்கியமான கூந்தல் மற்றும் பளபளப்பான சரும தோற்றம் கிடைக்கும். 

  • தலைவலி, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சினைகளுக்கு நீர் சிகிச்சை நல்ல பலன் அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. 

  • உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள் மற்றும் புற்றுநோய் பாதித்தவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நீர் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies