Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் கற்பனை திறனை வளர்க்க உதவும் வழிகள் !!! Ways to Build Your Child's Imagination at Home in Tamil

குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் கற்பனை திறனை வளர்க்க உதவும் வழிகள்  !!! Ways to Build Your Child's Imagination at Home !!! Tips for Building a Child's Imagination !!! How to Nurture Child's Creativity and Imagination !!! How to Develop Imagination in Children 



How to develop imagination in children


Why Is Imagination Important:

குழந்தைகளின் உலகம் முற்றிலும் மாறுபட்டது. பார்க்கும் விஷயங்களையும், கேள்விப்படும் செய்திகளையும், அவர்களது கற்பனை திறனுக்கேற்பவே புரிந்து கொள்வார்கள், அதனால்தான், தாத்தா, பாட்டிகள் வாழ்வியல் நெறிகளை கதைகளின் வடிவில் குழந்தைகளுக்கு சொல்வார்கள். 'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். ' என்று தொடங்கி கதையை சொல்லும் போது, குழந்தைகள் கண்கள் விரிய ஆர்வமாகக் கேட்பார்கள். இவ்வாறு தினமும் கதைகளை கேட்கும் குழந்தைகளின் கற்பனைத் திறன் நன்றாக வளர்ச்சி பெறுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கதைகளின் மூலம் வாழ்வியலுக்கான நிதி நெறிகளையும், சரியாள அணுகுமுறைகள் பற்றியும் அறிந்து கொள்வதால், சிக்கலான சூழ்நிலைகளில் கூட எளிதாக சமாளிக்கும் திறமை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. 


Imagination Activities:

ஆழமாக மனதில் பதியும் எந்த விஷயத்தையும் கதைகளின் வடிவில் குழந்தைகளுக்கு சொல்லும் போது எளிதாக நினைவில் நிற்கும். நீதி நெறிகள், பள்ளி பாடங்கள், பொது அறிவு சார்ந்த விஷயங்கள் போன்றவற்றை, சுவாரசியமான கதைகளாக கூறினால் ஆழ்மனதில் அழியாமல் பதியும், ஒழுக்க நெறிகளை வளர்க்கலாம் தங்களுடைய சுதந்திரமான போக்கில், பெரியவர்கள் தலையிட்டு, அறிவுரை வழங்குவதை குழந்தைகள் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதனால் அறிவுரைகளையும், ஒழுக்க நெறிகளையும் ஆர்வமூட்டும் வகையில் நன்னெறிக் கதைகளாகச் சொல்ல வேண்டும். அவர்களது இயல்புக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை அறிந்து, அதன் மூலம் நன்னெறிகளை வலியுறுத்தும் கதைகளைக் கூறுவது குழந்தைகளுக்கு பிடித்தமானதாக அமையும். 

கதை வடிவில் பாடங்கள் பாட நூல்களில் உள்ள வரலாற்று சம்பவங்களை, மதிப்பெண் அடிப்படையில் குழந்தைகள் படிக்கும் போது, அவை அவர்களது மனதில் பதிவது இல்லை . பாடங்களை கதைகளாக உருவகம் செய்து சொல்லும் போது, அதன் உட்பொருள் அவர்களது மனக் கண்ணில் காட்சிகளாக விரியும். அதனால், பாடங்களில் உள்ள பெயர்கள் உள்ளிட்ட இதர குறிப்புகள் மனதில் எளிதாக பதிந்து விடும். 

How to Develop Imagination in Children

கதைகளால் ஏற்படும் நன்மைகள் அன்போடு கதைகளைச் சொல்லும் பெற்றோரிடம் பிள்ளைகளுக்கு பாசப் பிணைப்பு அதிகரிக்கும். கதையில் சொல்லப்படும் காட்சிகளை கற்பனை செய்து கொள்வதால், குழந்தைகளின் சிந்தனைத் திறன் வளரும். அதனால், வளர்ந்த பிறகு எதையும் கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து செயல்படுவார்கள். கதை கேட்கும் பழக்கம் காரணமாக, கைப்பேசி விளையாட்டுகளுக்கு அடிமையாகி, உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும், இனிமையான பள்ளி படிப்பு மொழிப் பாடங்கள், வரலாறு, அறிவியல் குறித்த விஷயங்களை கதையாக வீட்டில் கேட்ட அனுபவத் தால், பள்ளியில் அந்த பாடங்களை மகிழ்ச்சியாக கற்பார்கள்.

வளர்ந்த பிறகு கதை கேட்ட அனுபவங் கள், வாசிப்பு ஆர்வமாக வெளிப்பட்டு, புத்தகங்களை வாசிக்கத் தொடங்குவார்கள். கதை சொல்லும் முறை இரவு நேரத்தில், குழந்தைகள் தூங்குவதற்கு முன்னர் கதை சொல்லலாம். அவர்களது வயதுக்கு ஏற்ற கதைகளைத் தேர்வு செய்து சொல்லி, அவற்றிலிருந்து கேள்வி கேட்பது, குழந்தைகளின் கவளத்தை ஒரு முகப்படுத்த உதவும். 

How to Develop Imagination in Children

கதை சொல்லி முடித்த பின், அதன் சாராம்சத்தை அவர்கள் புரிந்து கொண்ட விதத்தில் திரும்பவும் சொல்ல வைத்து பாராட்டலாம். திகிலூட்டும் பேய்க் கதைகள், மற்றவர்களை தந்திரமாக ஏமாற்றும் கதைகள், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் கதைகளை குழந்தைகளுக்கு சொல்வதை தவிர்க்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies