Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

ஹார்மோன்கள் என்றால் என்ன ? மனித உடலில் ஹார்மோன்கள் செய்யும் ஆச்சரியமூட்டும் செயல்கள் !!! Important Hormones and Their Functions in Human Body in Tamil

ஹார்மோன்கள் என்றால் என்ன ? மனித உடலில் ஹார்மோன்கள் செய்யும் ஆச்சரியமூட்டும் செயல்கள் !!! What Is a Hormone in the Human Body? !!! Important Hormones and Their Functions in Human Body in Tamil 

Important Hormones and Their Functions in Human Body in Tamil


மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களை 'உணர்ச்சிகளின் கூடாரம்' என்று குறிப்பிடலாம். காரணம், மனதில் உருவாகும் உணர்வுகள் மூலம், ஒருவரை வழிநடத்தும் பொறுப்பு ஹார்மோன்களுக்கு உள்ளது. உடலில் அமைந்துள்ள பல்வேறு சுரப்பிகள் மூலம் சுரக்கப்படும் ரசாயன திரவங்களான அவை, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன. அதன் முக்கியப் பணி, உடல்நிலை மற்றும் மனநிலை ஆகியவற்றை சீராக வைத்திருப்பதாகும். 


Hormones in Human Body and Their Functions:

👉மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருவதால், "டோபமைன்', 'செரட்டோனின்', 'ஆக்ஸிடோசின்' மற்றும் 'எண்டார்பின்' ஆகியவை 'ஹேப்பி ஹார்மோன்ஸ்' என்று சொல்லப்படுகின்றன. 

👉டோபமைன் மனநிலையை சீராக வைத்துக் கொள்வதற்கு முக்கியமான காரணியாக இது அமைந்திருக்கிறது. செரட்டோனின் தூக்கம் மற்றும் செரிமானம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் இதன் பங்கு முக்கியமானது.

👉ஆக்ஸிடோசின் பெண்களின் மகப்பேறு எளிதாக அமைவதற்கும், குழந்தைக்குத் தேவை யான தாய்ப்பால் சீராக சுரப்பதற்கும் இந்த ஹார்மோன் உதவி புரியும். பாலியல் ரீதியாக, தம்பதிகளுக்கு இடையிலான உறவில் உற்சாகத்தை தருவது இதன் சிறப்பாகும்.

👉எண்டார்பின் பாதத்தில் இதன் அளவு சீராக இருந்தால், மகிழ்ச்சி அதிகரித்து, மன அழுத்தம் மறையும். மூளை, உணவுக்குழாய் ஆகியவற்றில் உருவாகும் மகிழ்ச்சி "ஹார்மோன் இதுவாகும்.

👉தைராய்டு கழுத்தின் முன்புறம் பட்டாம் பூச்சி வடிவத்தில் உள்ள இந்த சுரப்பி, உடலின் வளர்சிதை மாற்றம், இதயம் மற்றும் செரிமான செயல்பாடு, தசைக் கட்டுப்பாடு, மூளை வளர்ச்சி மற்றும் எலும்பு அடர்த்தி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், 'தைராக்ஷின் (டீ 4) மற்றும் 'டிரையோடோ தைரோனைன் (டீ 3) ஆகியவற்றின் உற்பத்திக்கும் உதவுகிறது. டி 3-ல் 20 சதவீதம்  சதவீதம் மட்டுமே தைராய்டு சுரப்பியில் உருவாகிறது. மீதி, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாற்றப்படும் 'தைராக்ஸின்' மூலம் பெறப்படும் மதராக்ஸின்' மூலம் பெறப்படுகிறது.

👉கால்சிட்டோனின்' அளவை நிர்ணயிப்பதால், உடலின் கால்சியம் அளவையும் 'தைராய்டு கட்டுப்படுத்து கிறது. ஸ்டீராய்டு கருப்பை மற்றும் சிறுநீரகத்தின் மேற்பட்டை ஆகிய பகுதிகளிலிருந்து உற்பத்தியாகும் 'ஆண்ட்ரோஜன்', 'டெஸ்டோஸ்டிரோன்', 'புரோஜெஸ்ட்டிரோன்' மற்றும் 'ஈஸ்ட்ரோஜன்' ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தது.

👉அட்ரீனல் சிறுநீரகத்தின் மேற்புறம் அமைந்துள்ள இந்த சுரப்பி, பாலியல் மற்றும் மன அழுத்தத்தை தீர் மானிக்கும் 'கார்டிசோல்' ரசாயனத்தை சுரக்கச் செய்கிறது. 

👉'சஸ்ட்ரோஜன்', 'புரோஜெஸ்ட்டிரோன்', 'ஸ்டெ ராய்டுகள்', 'கார்டிசோன்', 'அட்ரினலின்', 'நோர்பைன்ப்ரைன்' மற்றும் டோபமைன்' போன்ற ரசாயனங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தி செய்ய உதவுகிறது. 

👉இன்சுலின் உடலில் 'குளுக்கோஸ்' அளவை சமநிலைப்படுத்துவதில் இதன் பங்கு பிரதானமாகும். ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை' தசைகள் மற்றும் கொழுப்பு, சேமிப்பு செல்களுக்குள் செலுத்துவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் பணியை மேற்கொள்கிறது. 

👉குளுக்ககான் பாலிபெப்டைடு ஹார்மோனான இந்த ரசாயனம், கல்ன்லின் மீது செயல்புரிந்து, கிளைக்கோஜன் ரசாய னத்தை 'குளுக்கோஸாக' மாற்றுகிறது. மேலும், 'லாக்டிக்' அமிலத்தில் இருந்தும், 'கார்போஹைட்ரேட் அல்லாத மூலக்கூறுகளிலிருந்தும், 'குளுக்கோஸ் உற்பத்தி செய்து ரத்தத்தில் சேர்க்கிறது. அதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். 

👉கணையம் அடி வயிற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ள கணையம், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை' சம நிலையில் பராமரிக்கிறது. 'இன்சுலின் மற்றும் 'குளுக்ககான்' ஆகியவற்றை உருவாக்குவதில் இதன் பங்கு முதன்மையானது. அவை இரண்டும் ரத்தத்தில் உள்ள 'குளுக்கோஸை' கட்டுப்படுத்துகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies