நம்மை அறியாமலே அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மூலிகைகள் !!! Medicinal Plants to Keep in Your Home !!! Medicinal Plants Name !!! Important Medicinal Plants and Their Uses !!! Herbal Plant !!! Medicinal Plants and their Uses with Pictures !!! Herbal Plants List
பருவத்தே பயிர் செய்' என்பது பழமொழி. இது பயிருக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும். இன்று தினமும் பலவித நோய்கிருமிகள் நம்மை அறியாமல், நம்மைச் சுற்றிலும் பரவிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளவும், ஆரோக்கியமாக இருக்கவும் நாம் உண்ணும் உணவு சரியாக இருக்க வேண்டும். உணவு என்பது, வெறும் வயிற்றை நிரப்புவதற்காக மட்டுமல்ல. உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும், செல்கள் வளர்ச்சியடைவதற்கும், உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவு ஆதாரமான ஒன்றாகும். அத்தகைய உணவை நாம் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது நலம் தரும்.
ரசாயனம் கலக்காத காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்களையே வாங்க வேண்டும். இயற்கையான உணவுப் பழக்கத்துக்கு மாறுவது இன்றைய சூழலில் மிகவும் அவசியம். உணவு மாற்றம் என்பது உணவில் கொண்டு வரும் மாற்றமாக மட்டும் இல்லாமல் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வதிலும் இருக்க வேண்டும்.
நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத பலவகை மூலிகைகள் :-
துளசி, கருவேப்பிலை, ஆடாதொடை, எலும்பொட்டி, அவரை, மருதாணி, திப்பிலி, சித்தரத்தை, லெமன்கிராஸ், வல்லாரை, வெற்றிலை, நீர்ப்பிரமி, இன்சுலின் கற்றாழை, பிரண்டை , சிறுகுறிஞ்சான், முள்ளு சீதா, கலிமுல்லா, பூனைமீசை என பலவித அரிய மூலிகைச் செடிகள் நம் உடலின் பல்வேறு உடல் உபாதைகளை சரி செய்ய பயன் படுகின்றன.
எந்தெந்த மூலிகைகள் மூலம் எந்தெந்த நோயை குணப்படுத்தும் : -
✌சளி தொல்லைக்கு, ஆடாதொடை, தூதுவளை மற்றும் கற்பூரவல்லி. இவற்றை அவ்வப்போது கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் எந்த சளித்தொல்லையும் அண்டாது. (Herbs for Colds and Sinus)
✌நீரிழிவு நோய்க்கு, ஆவாரம்பூ மற்றும் சிறு குறிஞ்சான். இவற்றை வீட்டிலேயே வளர்க்கலாம். இதற்கு பெரிதாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டில் உள்ள பால்கனியில் உள்ள கிரில்லில் ஏற்றிக் கூட வளர்க்கலாம். (Herbs for Kidney Health)
✌முடி வளர, கருமையாக இருக்க மற்றும் முகம் பொலிவாக , வெள்ளை கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணியை வைத்து துவையல் செய்யலாம். ஹேர் ஆயில் மற்றும் சீயக்காய் தூளிலும்சேர்க்கலாம். (Herbs for Hair Growth)
✌குழந்தைகளின் நியாபக சக்தியை பெருக்க, வல்லாரை, நீர்ப்பிரமி, திப்பிலி. இவை உடலை வஜ்ரம்போல் ஆக்கக்கூடிய வல்லமைபெற்றவை. இவை மூன்றையும் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குழந்தைகள் எப்பொழுதுமே ஞாபகசக்தி மற்றும் அதிக ஆற்றலுடன் விளங்குவார்கள். (Herbs for Memory Recall )
✌கழுத்து வலி, உடல் வலி மற்றும் கால் கை வலிகளைப் போக்க, பிரண்டையை துவையல் செய்தோ அல்லது வதக்கிவிட்டு இட்லி மாவில் கலந்து தோசையாக ஊற்றியோ உண்ணலாம். பிரண்டைத் துவையலை மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ இட்லிப்பொடி ஆக்கியும் உண்ணலாம். இதனுடைய மறுபெயர் 'வஜ்ரவல்லி'. உடலை வஜ்ரம் போல் ஆக்கக்கூடிய வல்லமை பெற்றது. (Herbs for Body Inflammation)
✌ரத்த சோகை மற்றும் இரும்புச் சத்துக்கு கருவேப்பிலை, முருங்கை. இவற்றையும் மொட்டை மாடியில் வளர்க்க முடியும்.
✌எலும்பு முறிவு, தேய்மானம் தடுக்க, எலும்பொட்டி மூலிகை இலையை பாலில்கலந்து மாதம் ஒரு முறை குடித்துவர மூட்டு வலி வராது.இதேபோல் இந்த எலும்பொட்டி இலையை நன்றாக அரைத்து காலில் பற்றுப் போட்டு வர எலும்பு முறிவு குணமாகும். (Herbs for Bone Health)
✌தூக்கமின்மைக்கு மருதாணிப் பூக்கள், இதை தலையணையில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம்வரும். மருதாணிகள் குளுமை ஏற்படுத்தக்கூடியவை.
ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பதினைந்து மூலிகைகளை வீட்டில் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் வல்லுநர்கள். இந்த மூலிகை மருத்துவத்தின் மூலம், நாம் அடிக்கடி மருத்துவரிடம் செல்வதை முற்றிலும் தவிர்க்கலாம்.
உடல் உபாதைகள் ஏற்பட கரணங்கள் :-
நாம் சாப்பிடும் உணவில் 'சரிவிகித உணவு' என்பது மிகவும் முக்கியம். தாது உப்புகள் அதிகமுள்ள கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவை தரமானதாக இருக்க வேண்டும். புரதம், மாவுச் சத்து, குளுக்கோஸ், கொழுப்புச் சத்துள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளவும். சத்தான உணவை விட, எளிதில் செரிக்கும் உணவையே தேர்ந்தெடுப்பது நல்லது. விசேஷம், பார்ட்டி போன்ற காரணங்களால் ஒவ்வாத புதிய வகை உணவையும், எளிதில் செரிமானமாகாத உணவையும் உண்பதை தவிர்க்கலாம்.
நேரம் தவறி உணவு உட்கொள்வதால், பல பிரச்சினைகள் உருவாகும். காலம் தவறி உண்பதால் உடலின் இயக்கத்திலும் மாற்றம் ஏற்படும். குறிப்பாக, இரவில் நீண்ட நேரம் கழித்து உணவு உண்பதால் செரிமானக் கோளாறு உருவாகும்.
அதேபோல், உண்ணும் போது அவசரமாக உண்ணாமல், மெதுவாக நிதானமாக மென்று உண்ண வேண்டும். அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் காலை உணவை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்நாளுக்குத் தேவையான முழுசக்தியும் அதிலிருந்தே கிடைக்கும். இரவு உணவில் கோதுமை, சிறுதானிய வகைகள், ரவை, ராகி உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
அதேபோல், தயிர், நீர்ச்சத்து நிறைந்த உணவைத் தவிர்க்க வேண்டும். சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிக்கக்கூடாது. இதனால் வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலத்தன்மையின் செயல்திறன் குறையும். எனவே செரிமானம் தாமதப்படும். அதேபோல் குளிர்பானம் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி, இஞ்சி, மல்லி, பனைவெல்லம் கலந்த பானம் அருந்துவது உடலுக்கு மிகவும் சிறந்தது. நாம் உண்ணும் உணவில், கலோரிகள் தேவை யான அளவு இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வயதுக்குத் தேவையான அளவு கலோரி எடுத்துக்கொள்வது அவசியம். நம் உணவுமுறையில் கொண்டு வரும் நல்ல மாற்றமே, நம்மைப் பல நோய்களிலிருந்து பாதுகாக்கும்.